Thursday, 31 December, 2009

பழைய வருஷத்துக்கு காட்டப்போறோம் டாட்டா..! - கானா பாடல்!(பல்லவி)

பழைய வருஷத்துக்கு காட்டப்போறோம் டாட்டா..!
புது வருஷத்துல ஓட்டப்போறோம் புது டொயோட்டா..!
நம் நண்பர்களோட சேர்ந்துடுவோம் நியூ இயர்க்கு ட்ரீட்டா
விடிய விடிய கொண்டாடிட்டு போவோம் தூங்க லேட்டா..!

(சரணம்-1)

ரெண்டாயிரத்தி ஓம்போதுல எத்தனையோ பார்த்தேண்டா...
மும்பை அட்டாக்கு... ஷேர் மார்கெட் படு வீக்கு..!
பொருளாதார மந்தம்.. வேலைக்கெல்லாம் பங்கம்..!
பட்ட அடியெல்லாம் இத்தோட போகட்டும்...!
புத்தாண்டு எல்லோருக்கும் நல்லதாகப் பிறக்கட்டும்..! (பழைய..)

(சரணம்-2)

நல்லதை நினைச்சா.. நல்லதே நடக்கும்..!
நல்லதை செஞ்சா... நல்லதே கிடைக்கும்...!
ஜனவரி ஒண்ணு... டூ தவுசன் டென்னு..!
ஜனவரி ஒண்ணு... டூ தவுசன் டென்னு..!
கொண்டு வாடா பன்னு..! கேக்கு பன்னு..!
கொண்டாடுவோம் டென்னு..! டூ தவுசன் டென்னு..! (பழைய..)

PDF-ஆகப் பெற..!


Tuesday, 29 December, 2009

பேனாவைத் தூக்கறாண்டா எம்புள்ளை சிங்கம்..! - கானா பாடல்..!

(பல்லவி)

பேனாவைத் தூக்கறான்டா எம்புள்ளை சிங்கம்..!
எழுத்து கூட்டி படிக்கிறான்டா எம்புள்ள தங்கம்..!
ஒண்ணரை வயசுதான்டா எம்புள்ளை சிங்கம்..!
கண்ணாலே பேசுறான்டா எம்புள்ள தங்கம்..!

(சரணம் - 1)

தத்தி தத்தி நடக்குறான்டா... அவன் தாத்தா போல பேசுறான்டா..!
தாமரைப்பூ சிரிப்புதான்டா... என் தங்க மகன் இவன்தான்டா..!
நல்லவங்க எல்லோருக்கும் நன்மை பல செய்வாண்டா..!
நாளைய உலகத்துக்கு பெரும் தலைவனாக வருவாண்டா..!

(பேனாவைத்...)

(சரணம் - 2)

குறும்புகள் செய்யுறான்டா.. மனசை கொள்ளை அடிக்குறான்டா..!
ஆர்ப்பாட்டம் பண்ணுறான்டா.. ஆட்டம் பாட்டம் போடுறான்டா..!
எல்லாத்தையும் படிப்பான்டா... ஏழை துயர் துடைப்பான்டா..!
எல்லோர்க்கும் நல்லவன்டா...  ஏட்டில் இடம் பிடிப்பான்டா..!

(பேனாவைத்...)

PDF-ஆகப் பெற..!


Monday, 28 December, 2009

நீல வான ஓடையில ..! - நட்பைப் பற்றிய கானா பாடல்

(பல்லவி)

நீலவான ஓடையில நெறைய  நெறைய நட்சத்திரம்..!
நண்பர் கூட்டம் சேர்ந்துகிட்டா கும்மாளம்தான் கூட வரும்..!
சொந்த வழி பந்தமெல்லாம் நாலு காசு எதிர் பார்க்கும்..!
நட்பு வழி பந்தமெல்லாம் நட்பை மட்டும் எதிர் பார்க்கும்..!

(சரணம் - 1)

உலகில் பூக்கும் பூக்களெல்லாம் பூத்த பிறகு வாடி விடும்..!
அன்பு, நட்பு ரெண்டு மட்டும் பூத்ததுமே வாழ வைக்கும்..!
நட்பு இல்லா மனிதனுக்கு நல்லது கெட்டது தெரியாது..!
நட்பு கொண்ட மனிதனுக்கு நாலு விஷயமும் தெரிய வரும்..!

(என் மேல் அன்பு கொண்டுள்ள எனது அன்பு நண்பர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..!)


PDF-ஆகப் பெற..!


Friday, 25 December, 2009

சின்ன இடையழகி..! சிங்கார நடையழகி..! - கானா பாடல்

(பல்லவி)

சின்ன இடையழகி..! சிங்கார நடையழகி..! 

கன்னக் குழியழகி..! கார்மேகக் கூந்தல் அழகி..!
பெண்ணே நீதாண்டி எனக்கு கண்ணழகி..!
என் காதல் கோட்டைக்கே நீ பேரழகி..!
என் பக்கம் வாடி..! ஒரு முத்தம் தாடி..! நீ எந்தன் ஜோடி..!
உங்கப்பனுக்கு  உஜாலா தாடி..! குஜாலா இருப்போம் வாடி..!

(சரணம் - 1)

எங்கம்மா உனக்குதாண்டி மாமியாரு..!
நீ இல்லாங்காட்டி ஆயிடுவேன் சாமியாரு..!
நான் உம்மேல வச்சிருக்கேன் ஆசை நூறு..!
நாம கல்யாணம் பண்ணிகிட்டா ரொம்ப ஜோரு..!
நம்ம வாழ்க்கை ரொம்ப ஜோரு..!


PDF-ஆகப் பெற..!


Sunday, 20 December, 2009

பிரௌசிங்கு சென்டருல பிட்டு படம் பாக்குறான்..! - கானா பாடல்..!

(பல்லவி)

பிரௌசிங்கு சென்டருல பிட்டு படம் பாக்குறான்..!
இன்டர்நெட்டு சென்டருல பிகரை தேடி போகுறான்..!
சாட்டிங்குல வித விதமா வலையத்தானே வீசுறான்..!
பிரச்சனையில் சிக்கிக்கிட்டா போலீஸ் கிட்ட மாட்டுறான்..!

(சரணம் - 1)

அறிவை வளர்க்கதானப்பா அறிவியலு இருக்குது..!
அறிவை இழந்து போயிட்டாக்கா லாக்கப்பு அழைக்குது ..!
நல்லதை நீ எண்ணிபுட்டா கம்பி எண்ணத் தேவை இல்ல..!
நல்லவனா இருந்துவிட்டா தொல்லை ஏதும் உனக்கு இல்ல..!

PDF-ஆகப் பெற..!


கோலி... பம்பரம்... கோலி... பம்பரம்...! - கானா பாடல்..!

(பல்லவி)


கோலி... பம்பரம்... கோலி... பம்பரம்...
விளையாடுவோம் வாடா...
ஊரு தாம்பரம்... ஊரு தாம்பரம்...
ஊர்சுத்துவோம் வாடா...

(சரணம் - 1)


காதலும் வேணாம்... கல்யாணமும் வேணாம் ...
அது இப்ப வந்து உன் கழுத்தை பிடிக்குமடா..!
ரெண்டுல ஒண்ணை நீயும் செஞ்சா கூட
உன் நிம்மதியே சுத்தமாக போய்டுமடா..!
வேணாண்டா நமக்கிந்த விவகாரம்..!
சுதந்திரமா இருப்பதுதான் கோடி சுகம்..!
எப்பவும் சுதந்திரமா இருப்பதுதான் கோடி சுகம்..PDF-ஆகப் பெற..!


உருவைக் கொடுத்தவ அம்மான்னா..! - கானா பாடல்..!

(பல்லவி)

உருவைக்  கொடுத்தவ அம்மான்னா...
உயிரக் கொடுத்தவரு அப்பாடா..!
அன்பைக் கொடுத்தவ அம்மான்னா...
அறிவைக் கொடுத்தவரு அப்பாடா..
ரெண்டு பெரும் நமக்கு கண்ணுடா...
எப்போதும் அன்பில் அவங்க ஒண்ணுடா..!

(சரணம் - 1)


கையில் காசுக் கொடுப்பதும் அப்பாடா..!
கண்டிப்பு செய்வதும் அப்பாடா..!
நம்மை படிக்க வைப்பதும் அப்பாடா..!
நல்லதைச் சொல்லுவதும் அப்பாடா..!
ஏதும் செஞ்சிடதே நீயும் தப்பாடா.... ஏதும்  தப்பாடா..!
நல்லவன்னு பேரெடுக்க வேணுண்டா..! பேரெடுக்க வேணுண்டா..!
அப்பாவுக்கு அது ஒண்ணே போதுண்டா..!
அப்பாவுக்கு அது ஒண்ணே போதுண்டா..!
PDF-ஆகப் பெற..!


ஏய்.. கிறு கிறுன்னு… விறு விறுன்னு... - கானா பாடல்..!

(பல்லவி)

ஏய்.. கிறு கிறுன்னு… விறு விறுன்னு சுத்துதடா ராட்டினம்..!
கோரஸ்: பீச்சுல சுத்துதடா ராட்டினம்..!
பர பரன்னு… சர சரன்னு வண்டியதான்  ஓட்டினோம்..!
கோரஸ்:பீச்சுல வண்டியதான்  ஓட்டினோம்..!
ஜோடி மேல ஜோடி போட்டு இருக்குது பல கூட்டம்..!
கோரஸ்: அங்க  காதலரு கூட்டம்..!
அதுல சில எல்லை மீறி போடுது களியாட்டம்..!
கோரஸ்: பீச்சுல காதல் களியாட்டம்..!

(சரணம் - 1)

உலகத்தில மிக நீளமான ரெண்டாவது பீச்சு..!
கோரஸ்: நம்ம மெரினாதான்னு ஆச்சு..!
குப்பை.. கூளம் எல்லாம் பழைய கதை ஆச்சு..!
கோரஸ்: இப்ப சுத்தமாகிப்  போச்சு..!
சுற்றுலா பயணிங்களோட கூட்டம் அதிகமாச்சு..!
கோரஸ்: நம்ம பீச்சு பேமசு ஆச்சு..!
கடலன்னை காத்துதான எங்களுக்கு மூச்சு..!
கோரஸ்: உப்பு காத்துதான மூச்சு..!


PDF-ஆகப் பெற..!


ஜீன்சு டைட்சு தேடுறியே ஷோபனா..! - கானா பாடல்.!

(பல்லவி)

ஜீன்சு டைட்சு தேடுறியே ஷோபனா..!
டைட்டா டிரெஸ்ஸு போடுறியே பேஷனா..!
உன் மேனியத்தான் காட்டுறியே மோசமா..!
உனக்கு மேல் நாட்டு நாகரீக மோகமா..!
உன்னை பல பேரு பாக்குறானே காமமா..?

(சரணம் - 1)

டி சர்ட்டை போட்டுகிட்டு… முன்னழகை காட்டிகிட்டு
வயது வந்த எல்லோரையும் வாயப் பிளக்க வைக்கற...
ஜீன்சை டைட்டா போட்டுகிட்டு… பின்னழகை காட்டிகிட்டு
உன் பின்னாலயே எல்லோரையும் ஜொள்ளு விட வைக்கிற…
வேணாமே நமக்கு இந்த (அ)நாகரீகம்… மேல் நாட்டு அநாகரீகம்
எல்லை மீறாம இருப்பதுதான் நாகரீகம்… நம் நாட்டு நாகரீகம்..!PDF-ஆகப் பெற..!


சென்னையில டபுள் டக்கரு பஸ்ஸுங்க..! - கானா பாடல்..!

(பல்லவி)

சென்னையில டபுள் டக்கரு பஸ்ஸுங்க…
அதுல டக்கரான பிகரு ஒண்ணு எஸ்ஸுங்க…
தாம்பரம் டூ ஹைகோர்ட் வரை பயணங்க…
தாவணி, சுடிதாரைப பார்த்தா கிக்குங்க.. ஏறுது கிக்குங்க…

(சரணம் - 1)

டபுள் டக்கரு பஸ்ஸில ஏறி குந்துங்க…
சென்னை அழகு நல்லா தெரியும் பாருங்க…
செட்ன்ட்ரலு, எல்ஐசி எல்லாம் ஜோருங்க…
தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை நிக்குங்க…
கிண்டி பல்லாவரம் வழி போகுங்க… தாம்பரம் போகுங்க…
இந்த டபுள் டக்கரு பஸ்ஸுக்கு இணை ஏதுங்க..?PDF-ஆகப் பெற..!


Thursday, 17 December, 2009

பலவிதமா பள்ளிக் கூடம் இருக்குது..! - கானா பாடல்

(பல்லவி)

பலவிதமா பள்ளிக் கூடம் இருக்குது..!
பரபரப்பா பிள்ளைங்கதான் படிக்குது
மெட்ரிகுலேசன் பீஸு நிறைய வாங்குது
பெத்தவங்க உழைப்பு அங்க போகுது..!

(சரணம் - 1)

(பிள்ளைங்களை) கார்பரேசன் ஸ்கூலில் சேக்க மறுக்குது
பீட்டர் விடும் பள்ளியத்தான் தேடுது..!
இங்கே தங்கத் தமிழ் பள்ளி தடுமாறுது..!
தஸ்ஸு புஸ்ஸு இங்கிலீஷ் பள்ளிய நாடுது..!

(சரணம் - 2)

நல்லபடிப்பு எங்கிருந்தாலும் ஏறும்..!
ஏற்றத்தாழ்வு இதுல மறைய வேணும்..!
எல்லோருக்கும் ஒரே கல்வி வரணும்..!
படிப்புக்கேத்த வேலை கிடைக்க வேணும்..!

PDF-ஆகப் பெற..!


உன் கன்னம் எனக்கு பைவ் ஸ்டாரு..! - கானா பாடல்

(பல்லவி)


உன் கன்னம் எனக்கு பைவ் ஸ்டாரு..!
உன் உதடு ரெண்டும் காட்பரி பாரு (அ) ஜோரு..!
சாக்லேட்டு போல இருந்து சட்டுன்னுதான் கரைஞ்சி போற..!
சந்தோஷத்தைக் காட்டிபுட்டு பட்டுன்னுதான்  மறைஞ்சி போற..!

(சரணம் - 1)

இனிப்பு போல இருக்குறியே... உன்னைத் திங்கும் எறும்பு நான்..!
சிரிச்சி என்னை மயக்குறியே... உனக்கு ரொம்ப குறும்புதான்..!
அட என் காபி பைட்டே... அல்பேன் லேபிலே...
எனை அசத்துகின்ற பெர்க் சாக்லேட்டே..!

உன் கன்னம் எனக்கு பைவ் ஸ்டாரு
உன் உதடு ரெண்டும் காட்பரி பாரு (அ) ஜோரு
சாக்லேட்டு போல இருந்து சட்டுன்னுதான் கரைஞ்சி போற
சந்தோஷத்தைக் காட்டிபுட்டு பட்டுன்னுதான்  மறைஞ்சி போற

PDF-ஆகப் பெற..!


தேனா இனிக்குமிடம் தேனாம் பேட்டை..! - கானா பாடல்

(பல்லவி)

தேனா இனிக்குமிடம் தேனாம் பேட்டை...
ஆள மயக்குமிடம் ஆழ்வார் பேட்டை...
பல சைட்டு பறக்குமிடம் சைதாப் பேட்டை...
பல கானா பிறக்குமிடம் கணேசுப் பேட்டை..!

பேட்டை..பேட்டை... இது எங்க பேட்டை
கோட்டை கோட்டை இது கானா கோட்டை
சென்னை மக்களின் சொந்தப் பேட்டை
இது மீனவ மக்களின் கானா கோட்டை..!

(சரணம் - 1)

வண்ணத்துணி இருக்குமிடம் வண்ணாரப்பேட்டை...
தங்கங்கிளி இருக்குமிடம் தண்டையார் பேட்டை...
இத்துப் போகுமிடம் இந்திரா பேட்டை...
செத்தா போகுமிடம் கண்ணம்மா பேட்டை...

பேட்டை..பேட்டை... இது எங்க பேட்டை...
கோட்டை கோட்டை இது கானா கோட்டை...
சென்னை மக்களின் சொந்தப் பேட்டை...
இது மீனவ மக்களின் கானா கோட்டை..!

PDF-ஆகப் பெற..!


சினிமாவுக்குப் போகலான்னு ..! - கானா பாடல்

(பல்லவி)

சினிமாவுக்குப் போகலான்னு கேட்டியேடி ஷில்பா
சீக்கிரமா வாடி நாம போகலாம் ஸ்ட்ரெயிட்டா
தியேட்டரில கூட்டம் கூடி நிக்குதடி ஷில்பா
டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இல்ல போகலாண்டி கொயிட்டா

(சரணம் - 1)

டிக்கெட் விலை கேட்டாலே மயக்கம் வருகுது
பிளாக்கில் வாங்கும் கூட்டம் இங்கே நிறைய இருக்குது
அந்த கால விலையெல்லாம் எங்க வரப் போகுது
ஏழைங்கல்லாம் சினிமாவ மறக்கும் நிலை வருகுது..!

(சரணம் - 2)

இதனால திருட்டு சிடி சக்கை போடு போடுது
டிவிடி பிளேயரெல்லாம் எல்லா வீட்டுலயும் மொளைக்குது
நல்ல படம் வந்தாலும் தியேட்டரில் ஈதானே ஓட்டுது
நல்ல நிலை வரணும்னு சினிமா ஏங்கி நிக்குது..!

PDF-ஆகப் பெற..!


நமக்கு காசு பணம் பெரிசில்ல நண்பா..! - கானா பாடல்

(பல்லவி)

நமக்கு காசு பணம் பெரிசில்ல நண்பா...!
கடமை உனக்கு இருக்குதடா நண்பா..!(அல்லது)
கண்ணியம்தான் நமக்கு வேணும் நண்பா..!
பெத்தவங்க இருப்பாங்க அன்பா...
அவங்களை தெருவிலதான் தள்ளாதடா நண்பா..!

(சரணம் - 1)

கட்டினவ பேச்சைக் கேட்டு நண்பா..!
பெத்தவங்களை விரட்டாதே நண்பா..!
உன்னை பெத்த தெய்வங்கடா நண்பா
உசிரப்போல காப்பத்துடா நண்பா..! - அவங்களை
உசிரப்போல காப்பத்துடா நண்பா..!


(சரணம் - 2)


முதியோர் இல்லம் ஒழியணும்னா நண்பா..!
இளையோரெல்லாம் திருந்த வேணும் அன்பா..!
எல்லோருமே ஒண்ணா வாழணும் நண்பா..!
குடும்பத்திலே அன்பு கிடைக்கும் நண்பா..! - கூட்டுக்
குடும்பத்திலே அன்பு கிடைக்கும் நண்பா..!

PDF-ஆகப் பெற..!


மார்கழி மாசம் வந்தா..! - கானா பாடல்

(பல்லவி)

மார்கழி மாசம் வந்தா போதும்
எங்க வீதியெல்லாம் மாக்கோலமாகும்
சாணியில பிள்ளையாரு முளைக்கும்
அதில பூசணிப்பூ பூத்தபடி சிரிக்கும்...!

(சரணம் - 1)

அஞ்சு மணிக்கு அலாரம் அடிக்கும்
எல்லோரோட தூக்கத்தையும் கலைக்கும்...! (அல்லது)
எல்லோரையும் தூக்கதிலிருந்து எழுப்பும்
சுப்ரபாதம் அதிகாலையில் ஒலிக்கும்
குளிரோட காதில் வந்து குதிக்கும்..!

தந்தானத்தோம்..திந்தானத்தோம்..தகிடுதத்தோம்...
சாமி பேரை சொல்லி பலர் திகிடுதத்தோம்...
போடு....தந்தானத்தோம்..திந்தானத்தோம்..தகிடுதத்தோம்...
சாமி பேரை சொல்லி பலர் திகிடுதத்தோம்...

PDF-ஆகப் பெற..!


Monday, 30 November, 2009

தாவணியைப் பார்த்து இங்க பல வருஷமாச்சு..! - கானா பாடல்

(பல்லவி)

தாவணியைப் பார்த்து இங்க பல வருஷமாச்சு
சுடிதாரும் ஜீன்சும் இங்கே பேஷனாகிப் போச்சு
அச்சம் மடம் நாணமெல்லாம் அல்பாயுசுல போச்சு
அல்டாப்பும் பீட்டரும்தான் பிகரின் பேஷனாச்சு...

(சரணம் - 1)


குடத்தை எடுத்து நடக்கும் அழகு அப்பங்கோ
குண்டு பூசணி உடம்பிருக்குது இப்பங்கோ...
அன்ன நடை நடப்பதெல்லாம் அப்பங்கோ...
ரோடு அதிர நடக்குதுங்க இப்பங்கோ...
ஸ்டூல போட்டு நடக்குதுங்க இப்பங்கோ... (தாவணியைப்…)

(சரணம் - 2)

உதடு சிவக்க சிரிப்பதெல்லாம் அப்பங்கோ
உதட்டுல சிவப்பு சாயம் பூசுதுங்கோ இப்பங்கோ...
தலையில் மல்லியப்பூ வப்பதெல்லாம் அப்பங்கோ...
தலையில் கிராப்பு அடிச்சு சுத்துங்க இப்பங்கோ...
ரோட்டுல தலைவிரிச்சு சுத்துங்கோ இப்பங்கோ... (தாவணியைப்…)PDF-ஆகப் பெற..!


காதல் ஒரு மாயவலை..! - கானா பாடல்..!

(பல்லவி)

காதல் ஒரு மாய வலை..!
கண்ணா நீயும் மயங்கிடாத..!
காதல் விரிக்கும் கன்னி வலை..!
கண்ணா நீயும் கவுந்துடாத..!
சிரிப்பு சிரிச்சி ஏமாத்துண்டா..!
உன்னை செல்லக்காசா ஆக்கிடும்டா..!
காதல் ஒரு மாய வலை..!
கண்ணா நீயும் மயங்கிடாத..!

(சரணம் - 1)


தெருவில் நடந்து போறவளை
உசிரக் கொடுத்து நேசிப்பதைவிட
கருவில் உன்னை சுமந்தவளை
காலம் முழுக்க நேசிக்கணுன்டா..!
உருக் கொடுத்த உத்தமத் தாயை
உசிரிருக்கும் வரை மறக்காம இருக்கணுன்டா..!              
அன்பு காட்ட உன் அம்மா இருக்காடா...
அவளைப் போல தெய்வம் வேற யாரடா..!

(காதல் ஒரு...)

(சரணம் - 2)

கண்ணைக் காட்டி போனவளை
காலம் முழுக்க நேசிப்பதை விட...
கண்ணைப் போல உன்னைக் காத்த
உங்கப்பனை நீயும் நேசிக்கணுன்டா..!
காதல் பித்து பிடிக்க வச்சி கண்ணாமூச்சி காட்டுவாடா..
அண்ணன் சொன்னார்...அப்பா சொன்னாருன்னு
கடைசியில் உன்னை அம்போன்னு விட்டுடுவாடா..!

(காதல் ஒரு...)

PDF-ஆகப் பெற..!


Monday, 2 November, 2009

ஷேர் ஆட்டோ... ஷேர் ஆட்டோ..! - கானா பாடல்

(பல்லவி)

ஷேர் ஆட்டோ... ஷேர் ஆட்டோ..!
மஞ்சக் கலரு ஷேர் ஆட்டோ..!
வளைஞ்சி நெளிஞ்சி ஓடுது பார்
ஊரு முழுக்க ஷேர் ஆட்டோ..!
கொஞ்ச தூரம் போகணும்னா அஞ்சு ரூபா தரணும் நீங்க..!
ரொம்ப தூரம் போகணும்னா பத்து ரூபா தரணும் நீங்க..!

(சரணம் - 1)

மாநகர பஸ்ஸையெல்லாம் முந்திகிட்டு போகுமுங்க...
நெரிசல் கூட்டத்திலயும் நேக்காக போகுமுங்க...
நெருக்கி உக்காந்துட்டா டிரைவர் மனசு நிறையுமுங்க...
நெருக்கடி காலத்துல கைகொடுக்கும் தோழனுங்க..!

(ஷேர் ஆட்டோ...)

(சரணம் - 2)

ராவு பகல் பார்க்காம ராட்டினம் போல் சுத்துமுங்க...
கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கின்ற தோழனுங்க...
ஒற்றுமையை உணர்த்துகின்ற உண்மையான வாகனங்க...
ஒண்ணாக பயணம் செஞ்சா உங்க செலவு குறையுமுங்க..!

(ஷேர் ஆட்டோ...)

PDF-ஆகப் பெற..!


Tuesday, 13 October, 2009

மயக்கும் மாலையிலே..! - கானா பாடல்

(பல்லவி)

மயக்கும் மாலையிலே… மார்கழி மாசத்திலே…
மங்கையவள் ஓரக்கண்ணால் சிரிக்கிறா…
மாமன் மயங்கிபுட்டா முந்தானையால் அடிக்கிறா…
மனசை கிள்ளி கிள்ளி என்னை அவ மயக்குறா..!

(சரணம் - 1)

காதல் ஒரு போதையடா… பார்த்தாலே ஏறுதடா…
பாக்காம பார்த்துப்புட்டா படபடப்பு கூடுதடா...
காதல் ராணி அவதாண்டா… கட்டழகியும் அவதாண்டா…
சிட்டாகப் பறந்துபுட்டா சோகம் என்னை வாட்டுதடா…(மயக்கும்…)

 ( சரணம் - 2)

ராப்பொழுது தூங்கலடா… ராசாத்தி நினைப்புலடா…
என்னிரவைப் பகலாக்கி துன்பத்தை எனக்கு காட்டுதடா...
கண்ணி வலை விரிச்சி வச்சு கண்ணோடு கலந்ததடா...
கண்ணுக்குள்ள இருந்துகிட்டு காதல் போதை காட்டுதடா..! (மயக்கும்…)

PDF-ஆகப் பெற..!


Friday, 9 October, 2009

சமுதாயநிலை மாறத்தான் வேணுமே..! - கானா பாடல்

(பல்லவி)

சமுதாயநிலை மாறத்தான் வேணுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…
சமூக ஏற்றத்தாழ்வு ஒழிவதற்கும்…
புதிய சரித்திரத்தை படைப்பதற்கும்…
சமுதாயநிலை மாறத்தான் வேணுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…

(சரணம் - 1)

சாதி மதிம் ஒழிய வேணும்…
சமத்துவம்தான் மலர வேணும்…
சாதி வெறியர்களை அழிக்க வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…

புல்லர்களை ஒழிக்க வேணும்…
புரட்சி மணம் நடக்க வேணும்…
புதிய உலகம் படைக்க வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…    (சமுதாயநிலை…)

 ( சரணம் - 2)

ஏற்றம் பெற உழைக்க வேணும்…
மாற்றங்களை மதிக்க வேணும்…
ஏழ்மை நிலையை போக்க வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…

படிப்பறிவை வளர்க்க வேணும்…
பட்டறிவை பயன்படுத்த வேணும்…
உலகம் போற்ற வாழவேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…  (சமுதாயநிலை…)


(சரணம் – 3)

விவசாயிகளை உயர்த்த வேணும்…
விலைவாசியை குறைக்க வேணும்…
வீணர்களை விரட்ட வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே… 


உழைக்கும் வர்க்கம் உயர வேணும்
உழைப்புக்கேத்த ஊதியம் வேணும்
ஊழல்வாதிகளை துரத்த வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…  (சமுதாயநிலை…)

PDF-ஆகப் பெற..!


Wednesday, 7 October, 2009

வாழ்க்கை ஒரு வட்டமடா..! - கானா பாடல்

(பல்லவி)

வாழ்க்கை ஒரு வட்டமடா...
வாழாவிட்டா கஷ்டமடா...
ஏழை வாழ்க்கை சிக்கலடா...
என்னால் சகிக்க முடியலடா..!

(சரணம் - 1)

ஏழை வாழ்க்கை மண்ணுல
பணக்கார வாழ்க்கை விண்ணுல
காசு, பணம் செய்யும் மாயம் கொஞ்சம் நஞ்சம் இல்ல..!
பாவம் நீயும் செய்யாத... பட்டினியை சகிக்காத...
பல்லாக்கு தூக்கி தூக்கி பச்சோந்தி போல் வாழாத...!  (வாழ்க்கை...)


(சரணம் - 1)

எல்லோரும் சமமுன்னாங்க...
எல்லாரும் இந்நாட்டு மன்னருன்னாங்க...
குடிசையில் வாழுகின்ற மன்னர்கள் இங்கே பாருங்க...
ஏய்ச்சி நீ வாழாத... ஏமாந்து போகாத...
உழைப்பை நீ உணர்ந்துகிட்டா... வாழ்க்கை உந்தன் கையில..! (வாழ்க்கை...)

PDF-ஆகப் பெற..!


Thursday, 24 September, 2009

ஆயிரந்தான் இருந்தாலும் அம்மா போல யார் வருவா..! - கானா பாடல்

(பல்லவி)

ஆயிரந்தான் இருந்தாலும் அம்மா போல யார் வருவா..!
அவளைப் போல அன்பைத் தர உலகத்துல யார் இருக்கா..!
உருக்கொடுத்து, உயிர் கொடுத்த உத்தமியை மறக்காதப்பா..!
இந்த கலிகால உலகத்திலே  மனித தெய்வம் அவதாம்பா..!

(சரணம் - 1)

பத்துமாசம் சுமந்தவப்பா... பத்தியம்தான் இருந்தவப்பா..!
பத்தரை மாத்து தங்கமப்பா..! பாசத்திற்கு பணிந்தவப்பா..!
தூக்கத்தையே மறந்தவப்பா... தூய உள்ளம் படைச்சவப்பா..!
துக்கப்பட்டு நீயிருந்தா... உடனே துடிப்பவளும் அவதாம்பா..!

(
ஆயிரந்தான்...)

(சரணம் - 2)

தியாக மனம் கொண்டவப்பா... திடமனசை நமக்களிப்பா..!
ஓயாம உழைப்பவப்பா... நம்மை உற்சாகமா வைச்சிருப்பா..!
கஷ்டங்களை அனுபவிப்பா... கட்டாந்தரையில் படுத்திருப்பா..!
இஷ்டப்பட்டு நீ கேட்டா தன் இதயத்தையே அறுத்து வைப்பா..!

(
ஆயிரந்தான்...)

(என் அன்னைக்கும், உலகத்தில் உள்ள அனைத்து அன்னைகளுக்கும் உங்களனைவரின் சார்பாக இந்த கானாப் பாடலை, அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்..!)


PDF-ஆகப் பெற..!


Wednesday, 23 September, 2009

விலைவாசி விஷம் போல ஏறுது..! - கானா பாடல்

(பல்லவி)

விலைவாசி விஷம் போல ஏறுது..!
ஏழை சனம் பட்டினியால் வாடுது..!
அரிசி விலை, பருப்பு விலை அதிகரிச்சி நிக்குது..!
அதிகவிலை தராததால காய்கறியும் சிரிக்குது..!


(சரணம் - 1)

பதுக்கலு கூட்டம் இங்க பலவேலை பாக்குது..!
விலையும் அதனால விமானம் போல ஏறுது..!
பாலு விலையேறி பாலகன் வயித்தை சுருக்குது..!
பாவப்பட்ட ஏழை சனம் பரிதவிச்சி நிக்குது..! (விலைவாசி...)


(சரணம் - 2)

உழைக்கும் வர்க்கம் இங்கே உடம்பு தேய உழைக்குது...
அதன் வியர்வை இங்கே ரத்தமாகி ஆறு போல ஓடுது..!
பணக்கார கூட்டமிங்கே பணத்தை காட்டி ஏய்க்குது..!
பாவப்பட்ட ஏழைசனங்க வறுமையால வாடுது..!(சில்லறை...)

PDF-ஆகப் பெற..!


Tuesday, 22 September, 2009

சில்லறை போலத்தானே சிரிக்குற..! - கானா பாடல்

(பல்லவி)

சில்லறை போலத்தானே சிரிக்குற..!
சிக்கனமா துணியை போட்டு மயக்குற..!
கண்ணால காதல் போதை ஏத்துற..!
கபால்னு எம்மனசை மாத்துற..!


(சரணம் - 1)

ஆர்ப்பாட்டம் இல்லாம... அங்க இங்க துள்ளாம...
அம்சமா நடந்து வந்து காட்டுற..!
நம்ம ஐஸ்வர்யா ராயாட்டம் அசத்துற..!
இந்த மாமனை அசால்டாக அசத்துற..! (சில்லறை...)


(சரணம் - 2)

தூண்டிலும் இல்லாம... வலை கிலை இல்லாம...
வெறும் கண்ணால காதல் வலை வீசுற..!
கண்ணழகி மீனா போல அசத்துற..!
அப்படியே மாமனை மயக்கி இழுக்குற..! (சில்லறை...)PDF-ஆகப் பெற..!


Wednesday, 16 September, 2009

பாழாப் போன மனுசனுக்கு… - கானா பாடல்

(பல்லவி)

பாழாப் போன மனுசனுக்கு… பணம் பெரும் போதையடா..!
வாழ வந்த மனுசனுக்கு… குணம் இங்கு இல்லையடா..!
காலம் போற வேகத்துல புகழ் போதை ஏறுதடா..!
வசதி வாய்ப்பு இருந்ததான் ஊரு உன்னை மதிக்குமடா..!


(சரணம் - 1)

நல்ல குணம் இருந்தாலும் பாழும் உலகம் மதிக்காது..!
நாலு பணம் உனக்கிருந்தா ஏழு உலகும் மதிக்குமடா..!
பணம் ஒரு வேசியடா… மயங்கி நீயும் போகாதடா..!
குணம் காத்து நீ வந்தா..! உன்னைத் தேடி பணம் வருண்டா..! (பாழாப் போன...)


(சரணம் - 2)

காசு பணம் வச்சிருந்தா கண்ட சொந்தம் வந்துடுண்டா..!
கஷ்டமுன்னு நீ நின்னா பஞ்சா பறந்து போயிடுண்டா..!
எல்லாம் இங்கு வேஷமடா… பொய்யி முகம் காட்டுதடா..!
பொல்லாத உலகத்துல… எல்லாம் இங்கு பணம்தாண்டா..! (பாழாப் போன...)

PDF-ஆகப் பெற..!


Tuesday, 15 September, 2009

மணிமேகலாவே கிட்ட நீ வாம்மா..! - கானா பாடல்

(பல்லவி)

மணிமேகலாவே கிட்ட நீ வாம்மா..!
கொஞ்சம் கனிவாக நீயும் பேசம்மா..!
காதலிப்பது ரொம்ப பாவமா..!
கத்துறியே ரொம்ப கோவமா..!
ஆசை காட்டி நைஸா போறியேயம்மா..!
உன்னால ஐஸாக உருகிறேனம்மா..!

(சரணம் - 1)

இந்த ராஜாவோடா ரோஜா நீதானம்மா..!
உன்னை தாஜா பண்ண கூஜா தூக்கணுமா..!
ரொம்ப பேஜாராச்சு உன்னோடதாம்மா..!
உன் சங்காத்தமே வேணான்டியம்மா..!     (மணிமேகலாவே...)


( சரணம் - 2)

உன் தங்கச்சிதான் சூப்பர் பிகரும்மா..!
எனக்கு நீ ஒரு சப்பை பிகரும்மா..!
ஜாக்கெட் போட்ட  குயிலு அவளம்மா..!
பிராக்கெட் போட போறேன் நானம்மா..!    (மணிமேகலாவே...)

PDF-ஆகப் பெற..!


Monday, 14 September, 2009

அரைகுறை ஆடையத்தான்... - கானா பாடல்

பல்லவி

அரைகுறை ஆடையத்தான் பெண்ணே நீ போடாதே..!
வயசுப்பசங்களைத்தான் வழுக்கி விழ வைக்காதே..!
உடம்பை மறைக்கும்படி ஆடையத்தான் நீ போட்டா..!
காலிப் பையன் கூட பண்ணமாட்டான் கலாட்டா..!

சரணம் - 1

தாவணி, சுடிதாருன்னு நல்ல டிரெஸ்ஸை நீ போடு..!
தமிழ்நாட்டு பொண்ணு இன்னு ஊருக்கு நீ காட்டு..!
அங்கங்கள் தெரிகின்ற  ஆடைகள் வேணாமே..!
தங்கமே உன்னழகை ஊரு பார்க்க வேணாமே..!     (அரைகுறை...)

சரணம் - 2

உன் மனசை திறந்து வைய்யி... உடம்பை மறைச்சி வைய்யி..!
பாதையில கவனம் வைய்யி... பழக்கத்தை மாத்தி வைய்யி..!
கண்ணிலென்ன மைய்யி... மைய்யி...
இந்த வாலிபம் பொய்யி... பொய்யி...        (அரைகுறை...)

PDF-ஆகப் பெற..!


Thursday, 10 September, 2009

ஆழ்வார் பேட்டையில ஒரு அடக்கம் நடக்குது...- கானா பாடல்

(பல்லவி)

ஆழ்வார் பேட்டையில ஒரு அடக்கம் நடக்குது!
ஆறடி மண்ணுக்குத்தான் அங்க சண்டையே நடக்குது..!
உயிரோடு இருக்கையில உதாசீனப் படுத்துது..!
உசிரை விட்டுப்புட்டா உச்சு... உச்சு கொட்டுது..!
(ஆழ்வார்…)

(சரணம் – 1)

உசிரோடு இருக்கும் வரை நல்லதை நீ செய்யிடா…
நல்லவன் மேல் எப்போதுமே பாசத்தை நீ வையடா…
சாதி சனம் எல்லாமுமே பொய்யி பொய்யி தானடா…
நான் சொல்லுறதை நம்பு.. எல்லாம் மெய்யிதானடா..! (ஆழ்வார்…)

(சரணம் – 2)

நல்லதை செஞ்சி வச்சா நாலு ஊரு பாராட்டும்..!
கெட்டதை செஞ்சி வச்சா கேடின்னு ஊர் தூற்றும்..!
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடறது வேணான்டா..!
நாடாண்ட ராசா கூட கடைசியில் பிடி சாம்பல்டா..! (ஆழ்வார்)


PDF-ஆகப் பெற..!


Thursday, 20 August, 2009

செல்போனு டாட்டரு… - கானா பாடல்

(பல்லவி)

செல்போனு டாட்டரு… மிஸ்டு காலு மேட்டரு..!
தம்மாத்தூண்டு செல்போனுல விடுறா பாரு பீட்டரு..!(செல்போனு…)


(சரணம் – 1)

காதுல வயர மாட்டிகிட்டு கன்னபின்னான்னு நடக்குறா…
காரு லாரி கண்டுக்காம ரோட்டு மேல மிதக்குறா…
தானாக சிரிக்கிறா… வீணாக சிணுங்குறா…
காசு தீந்துபுட்டா கமுக்கமாத்தான் இருக்கிறா..!(செல்போனு…)

(சரணம் – 2)

பிஎஸ்என்எல் போலத்தான் சிணுங்கி என்னை அழைக்கிறா...
ரிலையன்ஸ் போலத்தான் ரொம்ப ரிச்சாக மினுக்குறா...
ஏர்டெல்லாக இருக்கிறா… ஏர்செல்லாக முறைக்கிறா…
சிக்னல் காட்டிபுட்டா சிடுமூஞ்சிய காட்டுறா..!


செல்போனு டாட்டரு… மிஸ்டு காலு மேட்டரு..!
தம்மாத்தூண்டு செல்போனுல விடுறா பாரு பீட்டரு..!(செல்போனு…)

PDF-ஆகப் பெற..!


Wednesday, 19 August, 2009

கானா அறிமுகம்

சென்னை பூர்வீகக் குடிகளின் இரத்தத்தில் கலந்த பாடல் வகை கானா. நடைமுறை வார்த்தைகளைக் கொண்டு, இலக்கணங்கள் ஏதுமின்றி பாடுவது கானா ஆகும். இதில் அவர்களது உணர்வுகள், ஏக்கங்கள், வலிகள் என அனைத்தும் கலந்திருக்கும்... பிறந்தாலும் கானா பாடுவார்கள், இறந்தாலும் கானா பாடுவார்கள்..!

நான் சென்னை பூர்வீகக் குடிமகன் இல்லை என்றாலும், தமிழின் மகன் என்ற வகையில் நானும் கானா எழுதியுள்ளேன்.

காதல், சமூகக் கவிதைகள் என எழுதி வந்த என்னை கானா பாடல்கள் எழுதுங்கள் என ஊக்கமும், ஆக்கமும், அதற்கு சன்மானமும் தந்த திரு. பழனி அவர்களுக்கு எனது நன்றிகளை இங்கே பணிவுடன் சமர்ப்பிக்கிறேன். இதற்க்கான எழுத்து மற்றும் பதிப்பிக்கும் உரிமையை மீண்டும் வழங்கிய திரு. பழனி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளும் பலப்பல...

எனது வரிகளுக்கு  இசை வழியே உயிர் கொடுத்த நண்பர் மோகன்  ராம் அவர்களுக்கு எனது நட்பு கலந்த நன்றிகள்...

இந்த கானா பாடல்கள் வணிக நோக்கிற்காக எழுதப்பட்டாலும், என் படைப்புகள் என்பதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன்..! அதை உங்களிடம் படையலிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்...

PDF-ஆகப் பெற..!