Tuesday 13 October, 2009

மயக்கும் மாலையிலே..! - கானா பாடல்

(பல்லவி)

மயக்கும் மாலையிலே… மார்கழி மாசத்திலே…
மங்கையவள் ஓரக்கண்ணால் சிரிக்கிறா…
மாமன் மயங்கிபுட்டா முந்தானையால் அடிக்கிறா…
மனசை கிள்ளி கிள்ளி என்னை அவ மயக்குறா..!

(சரணம் - 1)

காதல் ஒரு போதையடா… பார்த்தாலே ஏறுதடா…
பாக்காம பார்த்துப்புட்டா படபடப்பு கூடுதடா...
காதல் ராணி அவதாண்டா… கட்டழகியும் அவதாண்டா…
சிட்டாகப் பறந்துபுட்டா சோகம் என்னை வாட்டுதடா…(மயக்கும்…)

 ( சரணம் - 2)

ராப்பொழுது தூங்கலடா… ராசாத்தி நினைப்புலடா…
என்னிரவைப் பகலாக்கி துன்பத்தை எனக்கு காட்டுதடா...
கண்ணி வலை விரிச்சி வச்சு கண்ணோடு கலந்ததடா...
கண்ணுக்குள்ள இருந்துகிட்டு காதல் போதை காட்டுதடா..! (மயக்கும்…)

PDF-ஆகப் பெற..!


Friday 9 October, 2009

சமுதாயநிலை மாறத்தான் வேணுமே..! - கானா பாடல்

(பல்லவி)

சமுதாயநிலை மாறத்தான் வேணுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…
சமூக ஏற்றத்தாழ்வு ஒழிவதற்கும்…
புதிய சரித்திரத்தை படைப்பதற்கும்…
சமுதாயநிலை மாறத்தான் வேணுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…

(சரணம் - 1)

சாதி மதிம் ஒழிய வேணும்…
சமத்துவம்தான் மலர வேணும்…
சாதி வெறியர்களை அழிக்க வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…

புல்லர்களை ஒழிக்க வேணும்…
புரட்சி மணம் நடக்க வேணும்…
புதிய உலகம் படைக்க வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…    (சமுதாயநிலை…)

 ( சரணம் - 2)

ஏற்றம் பெற உழைக்க வேணும்…
மாற்றங்களை மதிக்க வேணும்…
ஏழ்மை நிலையை போக்க வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…

படிப்பறிவை வளர்க்க வேணும்…
பட்டறிவை பயன்படுத்த வேணும்…
உலகம் போற்ற வாழவேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…  (சமுதாயநிலை…)


(சரணம் – 3)

விவசாயிகளை உயர்த்த வேணும்…
விலைவாசியை குறைக்க வேணும்…
வீணர்களை விரட்ட வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே… 


உழைக்கும் வர்க்கம் உயர வேணும்
உழைப்புக்கேத்த ஊதியம் வேணும்
ஊழல்வாதிகளை துரத்த வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…  (சமுதாயநிலை…)

PDF-ஆகப் பெற..!


Wednesday 7 October, 2009

வாழ்க்கை ஒரு வட்டமடா..! - கானா பாடல்

(பல்லவி)

வாழ்க்கை ஒரு வட்டமடா...
வாழாவிட்டா கஷ்டமடா...
ஏழை வாழ்க்கை சிக்கலடா...
என்னால் சகிக்க முடியலடா..!

(சரணம் - 1)

ஏழை வாழ்க்கை மண்ணுல
பணக்கார வாழ்க்கை விண்ணுல
காசு, பணம் செய்யும் மாயம் கொஞ்சம் நஞ்சம் இல்ல..!
பாவம் நீயும் செய்யாத... பட்டினியை சகிக்காத...
பல்லாக்கு தூக்கி தூக்கி பச்சோந்தி போல் வாழாத...!  (வாழ்க்கை...)


(சரணம் - 1)

எல்லோரும் சமமுன்னாங்க...
எல்லாரும் இந்நாட்டு மன்னருன்னாங்க...
குடிசையில் வாழுகின்ற மன்னர்கள் இங்கே பாருங்க...
ஏய்ச்சி நீ வாழாத... ஏமாந்து போகாத...
உழைப்பை நீ உணர்ந்துகிட்டா... வாழ்க்கை உந்தன் கையில..! (வாழ்க்கை...)

PDF-ஆகப் பெற..!