Friday 31 December 2010

நட்ட நாடு சாமத்துல பிறக்குதுடா புத்தாண்டு..! - புத்தாண்டு சிறப்பு கானா பாடல்


(பல்லவி)

நட்ட நாடு சாமத்துல பிறக்குதுடா புத்தாண்டு..! 
உலகத்தோட சேர்ந்து நீயும் உற்சாகமா கொண்டாடு..!
சாதி, மத, பேதமின்றி எல்லோருடன் கொண்டாடு 
இனி நல்லதே நடக்கும்னு கானா பாடு..! நீயும் தானா பாடு..! 

(சரணம் - 1)

உலக மக்கள் எல்லோருக்கும் இந்நாள் ஒரு திருநாள்...
மொழி மறந்து, நிறம் மறந்து வாழ்த்தும் ஒரு வளநாள்...
துன்பத்தினை மறந்து விட , இன்பத்தினை சேர்த்து விட
இனிப்புகளை கொடுத்து விட பிறக்குது ஒரு புது நாள்... 
எல்லோரும் கொண்டாடும் குதுகலமான நாள்..! 

(சரணம் - 2)

புத்தாண்டை நீயும் கொண்டாடு..!
புது மனுசனாக நீயும் மாறு..!
கஷ்டத்தெல்லாம் தூக்கி போடு..!
விஷ் யு ஹேப்பி நியூ இயருன்னு பாடு..! 
வந்துடிச்சி டூ தௌசன் லெவனு..!
இனி வாழ்கையில நாம வின்னு..!


(இனிய இணைய வாசகர்களுக்கும், கானா ரசிகர்களுக்கும் எனது மனதிற்கினிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2010)


PDF-ஆகப் பெற..!


Wednesday 22 December 2010

கடலுக்குள்ள போய் வருவோம்..! - கானா பாடல்


(பல்லவி)

கடலுக்குள்ள போய் வருவோம்
கட்டுமரத்தை சேர்த்திழுப்போம்....
வாடா நண்பா வலைய வீசலாம்...
வகை வகையா மீனை பிடிக்கலாம்...!

(சரணம்-1)
எறா... நண்டு கிடைச்சாதானே
இன்னைக்கு நமக்கு சோறு...
அது எப்படி கிடைக்கும் கூறு..?

சுறா கூட்டம் போகுதடா
நீயும் அங்கே பாரு...
எட்டி வீசு வலைய நல்லா
எல்லாம் மாட்டும் பாரு... அட
அந்த எறா மாட்டும் பாரு..!  (கடலுக்குள்ளே...!)

(சரணம்-2)
புயலில் சிக்கிய படகு போல
நம் வாழ்க்கை ஆனது பாரு...
அதை கரை சேர்ப்பது யாரு..?

நல்லா உழைச்சி முன்னுக்கு வந்தா
நம்ம வாழ்க்கை செழிக்கும் பாரு
இந்த கடலன்னை இருக்கும் வரை
நமக்கு கவலை ஏது கூறு..!  (கடலுக்குள்ளே...!)

(இரண்டு மீனவ நண்பர்கள் பாடுவது போல் எழுதியிருக்கிறேன்... பிடித்திருந்தால் பாடி மகிழவும்..!)PDF-ஆகப் பெற..!


Tuesday 30 November 2010

மயக்கும் மாலையிலே… மார்கழி மாசத்திலே..! - கானா பாடல்

(பல்லவி)

மயக்கும் மாலையிலே… மார்கழி மாசத்திலே…
மங்கையவள் ஓரக்கண்ணால் சிரிக்கிறா…
மாமன் மயங்கிபுட்டா... முந்தானையால் அடிக்கிறா…
மனசை கிள்ளி கிள்ளி... என்னை அவ மயக்குறா..!

(சரணம் - 1)

காதல் ஒரு போதையடா… பார்த்தாலே ஏறுதடா…
பாக்காம பார்த்துப்புட்டா படபடப்பு கூடுதடா...
கன்னி ராணி அவதாண்டா… கட்டழகியும் அவதாண்டா…
சிட்டாகப் பறந்துபுட்டா சோகம் என்னை வாட்டுதடா… (மயக்கும்…)

( சரணம் - 2)

ராசாத்தி நினைப்புலதான் ராப்பொழுது தூங்கலடா…
என்னிரவைப் பகலாக்கி துன்பத்தை எனக்கு காட்டுறாடா...
கண்ணி வலை விரிச்சபடி என் கண்ணோடு கலந்தாடா...
கண்ணுக்குள்ள இருந்துகிட்டு காதல் போதை ஏத்தறாடா..! (மயக்கும்…)

PDF-ஆகப் பெற..!


Friday 4 June 2010

மத்தியான வெயிலு இங்க மண்டையத்தான் பொளக்குது..! - கானா பாடல்

(பல்லவி)

மத்தியான வெயிலு இங்க மண்டையத்தான் பொளக்குது..!
கத்திரி போட்ட வெயிலு இங்க கண்ணாமூச்சி காட்டுது..!
உடலில் உள்ள வியர்வை இங்க உழைக்காமலே வழியுது..!
கடலில் வீசும் காத்து இங்க கடும் வெப்பமாக மாறுது..!
(சரணம் - 1)

உடம்பு எல்லாம் கொப்பளமா ஆகுது..!
வியர்வையால உப்பளமா மாறுது..!
சுட்ட அப்பளமா நம்ம பூமி வேகுது..!
வெப்பத்தால நீர் வறண்டு போகுது..! (மத்தியான...)

(சரணம் - 2)

எரிமலையும் இவ்வெயிலும் ஒண்ணு..!
மரத்த நாம வளக்கணும்டா கண்ணு..!
மழையில்லன்னா நாம எல்லாம் மண்ணு..!
மனசிலதான் நீயும் இதை எண்ணு..! (மத்தியான...)

(சரணம் - 3)

பூமித்தாயை காக்க வேணும் நாமதான்..!
அவளை விட பொறுமைசாலி யாருதான்
பூமி மாசை தடுத்தாலே போதும்தான்..!
வெப்பமெல்லாம் தானா குறையும் ஜோருதான்..! (மத்தியான...)
 


PDF-ஆகப் பெற..!


Wednesday 17 February 2010

ஆனா... ஊனா... தேனா...கானா... - கானா பாடல்!


(பல்லவி)

ஆனா... ஊனா... தேனா...கானா...
என்ன பாடச் சொன்னா மீனா...
அவ காதலைச் சொன்னா தானா
நான் கரைஞ்சி போனேன் தேனா..!

(சரணம் - 1)

அவ கண்ணுக்குள்ள தெரியுதடா வண்டு..!
அவ கையும் காலும் அழகு வாழத் தண்டு..!
அவ முக அழகில் தெரியுதடா பூச்செண்டு..!
என் நெஞ்சுக்குள்ள போட்டாளடா குண்டு..! குண்டு..! குண்டு..! (ஆனா...)

(சரணம் - 2)

அவ அழகில் மயங்கிப் போனேன் நானு..!
அப்போ அவ காட்டினாடா சீனு..!
அவ துள்ளி துள்ளி ஓடயில மானு..!
அவ கைநழுவிப் போறதில மீனு..! மீனு..! மீனு..! (ஆனா...)

(சரணம் - 3)

அவ கூந்தலிலே வச்சேனடா பூவு..!
அவ இல்லாங்காட்டி நெஞ்சுக்குள்ள நோவு..!
அவ நினைப்பில் தூங்கல பல ராவு..!
அட அவதாண்டா எப்போதும் என் டாவு..! டாவு..! டாவு..!(ஆனா...)


PDF-ஆகப் பெற..!


Monday 15 February 2010

தினம் தினம் போனம்மா..! - கானா பாடல்


(பல்லவி)


தினம் தினம் போனம்மா..!
புது கிரெடிட் கார்டு வேணுமா..?

உன் பர்சு கனம் பார்ப்பமா..!
பர்ஸனல் லோனு வேணுமா..?

(சரணம் - 1)

பெண்:

கொஞ்சிப் பேசி நான் தாரேன்
கிரெடிட் கார்டை நீ வாங்கு..!
பந்தாவைத்தான் நீ காட்ட
பர்ஸனல் லோனை நீ வாங்கு..!

காசு பணம் தேவையில்ல
கார்டு உனக்கு போதுமடா..!
வேண்டியதை நீ வாங்கலாம்
லோனிருந்தா போதுமடா..!

(சரணம் - 2)

ஆண்:

தவணை கட்ட முடியலன்னா
தாவு தீர்ந்து போயிடும்மா..!
பணம் வட்டி குட்டி போடும்மா..!
தொகை பகையா மாறும்மா..!

தினம் தினம் போனம்மா..!
கிரெடிட் கார்டு வேணாம்மா..!
என் பர்சு கனம் போதும்மா..!
பர்ஸனல் லோனு வேணாம்மா..!

PDF-ஆகப் பெற..!


Sunday 14 February 2010

வேலம்மா கூட நானு வேலண்டைன் டே கொண்டாடினேன்..! - கானா பாடல்


(பல்லவி)

வேலம்மா கூட நானு வேலண்டைன் டே கொண்டாடினேன்..!
அவளுக்கு ரோஜா வாங்க காசில்லாம திண்டாடினேன்..!
கண்ணம்மா கூட நானு காதலர் தினம் கொண்டாடினேன்
அவளுக்கு கூஜா தூக்கி குஜாலாக இருந்துக்கினேன்..!

லவ்வோ லவ்வுங்கோ..! பஞ்சு மிட்டாய் லவ்வுங்கோ..!
ஜவ்வோ ஜவ்வுங்கோ..! சல்ப்பேட்டா ஜவ்வுங்கோ..!

(சரணம் - 1)

பீச்சிக்குதான் இஸ்துகினு... கன்னம் ரெண்டும் ஒட்டிகினு...
கடலைத்தான் மொறச்சிகினு... கடலையை வறுத்துகினு...
வேலம்மாவிடம் போட்டேனடா பிட்டு... காதல் பிட்டு..!
காசில்லனதும் பறந்துட்டாடா கிட்டு... அவ என்னை விட்டு..! (வேலம்மா...)

(சரணம் - 2)

ரிக்ஷாவைத்தான் இஸ்துகினு... கண்ணம்மாவை கூட்டிகினு...
பெடலைதான் மிதிச்சிகினு... மவுண்ட் ரோட்டில் ஓட்டிகினு...
கண்ணம்மாவிடம் போட்டேனடா பிட்டு... காதல் பிட்டு..!
அவ கண்ணை காட்டி மயக்கிப்புட்டா கிட்டு.. அவதான் என் சிட்டு..!

இந்த லவ்வுதான் டாப்பு.. மத்ததெல்லாம் டூப்பு... - மாமே
இந்த லவ்வுதான் டாப்பு.. மத்ததெல்லாம் டூப்பு..!   (வேலம்மா...)

(உங்க எல்லாத்துக்கும் நம்ம சார்பில் காதலர் தின வாழ்த்துக்கள் பா..)


PDF-ஆகப் பெற..!


Thursday 11 February 2010

மெரீனா பிச்சுலதான் காதலரு கூட்டமுங்க..! - கானா பாடல்


(பல்லவி)

மெரீனா பிச்சுலதான் காதலரு கூட்டமுங்க..!
கைய ரெண்டும் கோத்துகிட்டு போடுது ஒரு ஆட்டமுங்க!
சுனாமியே வந்தாலும் பயந்து போக மாட்டாங்க..!
சுண்டல்காரன் வந்தா மட்டும் சுறுசுறுன்னு விழிப்பாங்க..!

(சரணம் - 1)

காத்து மழை அடிச்சாலும்...  வெட்ட வெயில் அடிச்சாலும்...
சத்தமே போட்டாலும்... சளைக்கவே மாட்டாங்க..!
கன்னம் கன்னம் ஒட்டிகிட்டு... காலு ரெண்டும் பின்னிகிட்டு
கழுத்து மேல கைய போட்டு... காதலைத்தான் வளர்ப்பாங்க..! (மெரீனா...)

(சரணம் - 2)

புயல் மணல் அடிச்சாலும்... பூகம்பமே வந்தாலும்...
போலீஸே வந்தாலும்... பிரிஞ்சி போக மாட்டாங்க...
அப்பனையும் நினைக்காம... அம்மாவையும் நினைக்காம...
குடும்பத்தை நினைக்காம... குஜாலாதான் இருப்பாங்க..!  (மெரீனா...)

PDF-ஆகப் பெற..!


Wednesday 10 February 2010

காலம் இப்போ மாறிப் போச்சு கண்ணு..! - கானா பாடல்

 

(பல்லவி)

காலம் இப்போ மாறிப் போச்சு கண்ணு..!
அட கம்ப்யூட்டருல சிரிக்கிறாடா பொண்ணு..!
அத நம்பிப் போனா ஆயிடுவ மண்ணு..!
நான் சொல்லுறத நல்லா கேளு கண்ணு..!

(சரணம் - 1)

உலக அறிவை வளர்க்கதாண்டா இன்டர்நெட்டு..!
அதுல போயி பண்ணுறாண்டா காதல் சாட்டு..!
அறிவை இழந்து அதுல போயி கொட்றான் துட்டு..!
மீறி ஆளைத் தேடி போனான்னாக்கா ஆளே அவுட்டு..! (காலம்...)

(சரணம் - 2)

நெட்டில் காதலுன்னு சொல்லிக்கிட்டு பிட்டு படம் காட்டறான்..!
நாம்மாளுந்தான் துட்டை கட்டி வாயப் பொளந்து பாக்கறான்..!
கம்யூட்டரே கதியின்னு காலம் முழுசும் கெடக்கிறான்..!
வாழ்கை சீரழிவது தெரியமா காமத்துல மிதக்குறான்..! (காலம்...)

PDF-ஆகப் பெற..!


Monday 8 February 2010

துபாய் போன மச்சான் பேரு கபாலி..! - கானா பாடல்


(பல்லவி )


துபாய் போன மச்சான் பேரு கபாலி..!
துட்டு சேக்க அவன் படுற பாடு தலைவலி..!
ஒட்டகத்தை மேய்ச்சாதாண்டா தினக் கூலி..!
நம்ம ஷோக்காலி அங்க ஆனனாடா சீக்காலி..!

(சரணம்- 1)

மச்சி குல்லா போடும் வேலை உனக்கு எதுக்குடா..?
வளைகுடா நாட்டுல முதுகு வளைவு எதுக்குடா..?
நம் நாட்டுலயே நெறைய வேலை இருக்குடா..!
காசு குறையானாலும் உன்னாடுங்கறது மிடுக்குடா..!
(துபாய் போன..)


(சரணம்- 2)

அங்கே கசக்கி பிழியும் கஸ்மாலங்க நிறையடா..!
இங்கே உழைச்சா போதும் நம்ம நாடு செழிக்குண்டா..!
வெய்ய நாட்டில் வெந்து போவதெதுக்குடா..!
நம்ம மக்களோட வாழ்வதுதான் சிறப்புடா..! (துபாய் போன..)

(சரணம் 3)

அம்மா அப்பா பாசம் அங்கே இருக்குமா..?
அன்பு மனைவியோட அரவணைப்பு  கிடைக்குமா..?
உன் குழந்தைகளின் குறும்பை ரசிக்க முடியுமா..?
வேணான்டா கபாலி வெளிநாடு..!
உழைப்பதுல நீதாண்டா பெரியாளு..! (துபாய் போன..)

(அன்பான அயல் நாடு வாழ் நண்பர்களுக்கு, தங்களை குறை கூறி எழுதப்பட்டதல்ல இப்பாடல்... நம் நாட்டினில் நம்மவர்கள் உழைக்க வேண்டுமென்கிற ஒரு இந்தியனின் ஆசை..)

PDF-ஆகப் பெற..!


Thursday 4 February 2010

கெடச்ச வரை லாபமுன்னு சுருட்டுதடா உலகம்..! - கானா பாடல்

(பல்லவி)

கெடச்ச வரை லாபமுன்னு சுருட்டுதடா உலகம்..!
நம் காலை வாரி விட்டபடி மூட்டுதடா கலகம்..!
பொது நலத்தை கொன்று தின்னும் கொடூரமான உலகம்..!
இந்த சுயநல அரக்கனுக்கு இல்லையடா மரணம்..!

(சரணம் - 1)

பதவி மேல ஆச வச்சி ஆளை காலி பண்ணுது
பொருளு மேல ஆச வச்சி பொட்டியத்தான் தூக்குது
பொண்ணு மேல ஆச வச்சி மிருகமாக மாறுது
மண்ணு மேல ஆச வச்சி மண்ணாகிப் போகுது..!  (கெடச்ச வரை... )

(சரணம் -2)

சொத்துக்காக அப்பனையே கண்டபடி உதைக்குது
பெத்தவன்னு பாக்காம விரட்டிதான அடிக்குது..!
காசுக்காக கட்டினவளை வீட்டை விட்டு விரட்டுது
மனித மனம் மிருகமாகி வேதனையை கூட்டுது..!  (கெடச்ச வரை... )


PDF-ஆகப் பெற..!


Wednesday 27 January 2010

கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - கானா பாடல்

(பல்லவி)
கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - அங்கே
கோகிலாவின் கரகமணி ஆட்டம்...
பெரிசு... சிரிசுங்கல்லாம் நோட்டம்...
அவ மேல நோட்டம்..!
கோகிலாவை மடக்க நோட்டை நீட்டும்..!
ரூபா நோட்டை நீட்டும்..!

போடு...கோவிலிலே... கோவிலிலே...
கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - அங்கே
கோகிலாவின் கரகமணி ஆட்டம்..!

(சரணம்-1)
குத்துறாளே கும்மாங்குத்து ஆட்டம்
அவ குலுங்கி வரும் ஆப்பிள் பழத்தோட்டம்..!
அவ பாடினாக்கா சிலுசிலுக்குது கூட்டம்
அவ பார்த்தாலே காதல் பனி மூட்டம்...
மனசுக்குள் ஆடுதடா காமக் களியாட்டம்..!

போடு... கோவிலிலே... கோவிலிலே...
கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - அங்கே
கோகிலாவின் கரகமணி ஆட்டம்..!

(சரணம்-2)

ஊரே அவ அழகில் மாட்டும் - அவளுக்கு
இந்த மச்சக்காளை மேலதான நாட்டம்..!
உன்னழகில் எங்கண்ணு ரெண்டும் கூசும்..!
வாடி நீயும் நானும் போடலாம் ஒரு ஆட்டம்..!

போடு... கோவிலிலே... கோவிலிலே...
கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - அங்கே
கோகிலாவின் கரகமணி ஆட்டம்..!
பெரிசு... சிரிசுங்கல்லாம் நோட்டம்...
அவ மேல நோட்டம்..!
கோகிலாவை மடக்க நோட்டை நீட்டும்..!
ரூபா நோட்டை நீட்டும்..!


PDF-ஆகப் பெற..!


குடியரசு நமது இந்தியா..! - கானா பாடல்(பல்லவி)

குடியரசு நமது இந்தியா..! - குதுகலமா
கொண்டாடுகிறோம் நாமதானய்யா..!
மன்னராட்சி ஒழிந்த நாளய்யா..! - இன்று
மக்களாட்சி மலர்ந்த நாளய்யா..!
நம் முன்னோரெல்லாம் வகுத்த ஏடய்யா..! - அதை
நம் மூச்சு போல காக்க வேணுய்யா..!

(சரணம் - 1)

நம் அடிமைத்தனம் அழிந்து போகவே...
நம்மை நாமே ஆட்சி செய்யவே...
நாற்றிசையும் போற்றி வாழ்த்தவே...
பிறந்ததொரு நல்ல தினம்..!
அதுதானே குடியரசு தினம்..!
கொண்டாடாட வேணும் இந்த தினம்..!
நாமெல்லாம் இந்திய இனம்..! (குடியரசு...)

(சரணம் - 2)

சட்ட திட்டம் நம்மை காக்கவே...
எங்கும் சமத்துவம்தான் ஓங்கி நிற்கவே...
நீதி நிலை நிலைத்து நிறகவே...
பிறந்ததொரு நல்ல தினம்..!
அதுதானே குடியரசு தினம்..!
கொண்டாடாட வேணும் இந்த தினம்..!
நாமெல்லாம் இந்திய இனம்..! (குடியரசு...)

(உங்களனைவருக்கும் எனது இதயம் நிறைந்த 61-வது குடியரசுதின நல் வாழ்த்துகள்..)
PDF-ஆகப் பெற..!


Friday 22 January 2010

காதலை தபால் மூலம் வளர்த்தாங்க..! - கானா பாடல்(பல்லவி)


காதலை தபால் மூலம் வளர்த்தாங்க அது அந்தக்காலம்..!
ஈமெயில் மூலம் வளக்குறாங்க அது இந்தக் காலம்..!
காதலை டெலிபோன் மூலம் வளர்த்தாங்க அது அந்தக்காலம்..!
செல்போன் மூலம் வளக்குறாங்க அது இந்தக் காலம்..!

(சரணம் - 1)


கருவிங்க மாறிச்சு...காலமும் மாறிச்சு...
கலகல பேச்சிலதான் காசும் தீர்ந்திச்சி...
காசும் தீர்ந்தாதால காதலும் வாடுச்சி...
கடைசியில் காதலும் மாறிப் போச்சி...
மச்சி காதலும் மாறிப் போச்சி...             (காதலை..!)

(சரணம் - 2)


அந்தக் கால காதலுக்கு ஆயிசுதான் நூறுடா..!
இந்தக் கால காதலுக்கு அல்பாயுசு பாருடா..!
உள்ளம் ரெண்டும் சேர்வதுதான் அந்தக் கால காதல்டா..!
உடம்பு சொகம் தேடுறது இந்தக் கால காதல்டா..!  (காதலை..!)

காதல் காதல்... காசு இருக்கும் வரை காதல்..!
காசு தீர்ந்தா வருதே மோதல்..பிகருடன் வருதே மோதல்..!

PDF-ஆகப் பெற..!


Wednesday 20 January 2010

ஆட்டோ ஓட்டி பொழைக்கிறேண்டி அம்சா..! - கானா பாடல்


(பல்லவி)

ஆட்டோ ஓட்டி பொழைக்கிறேண்டி அம்சா... மடிப்பு அம்சா..!
ஆட்டோ  சவாரியத்தான் காணோமடி அம்சா... மடிப்பு அம்சா..!
ப்ரீயா உன்னை கூட்டிப் போறேண்டி அம்சா... மடிப்பு அம்சா..!
பீச்சு... பார்க்குன்னு சுத்தலாண்டி சொகுசா... வாடி அம்சா..!

(சரணம் -1)

உன் புன்னகையில் கவுந்து போனேன் முழுசா... ஆளே முழுசா..!
என்னுள்ளே காதல் பூ பூத்திருச்சி பெருசா... ரொம்ப பெருசா..!
கண்மணியே நீ என்னைப் பார்த்து சிரிச்சா... அழகா சிரிச்சா..!
காலம் முழுக்க காத்து கிடப்பேன் உனக்கா.. உனக்கே உனக்கா..!

PDF-ஆகப் பெற..!


Wednesday 13 January 2010

பச்சரிசிப் பொங்கலு... பாட்டாளிக்கும் பொங்கலு..! - கானா பாடல்!
(பல்லவி)

பச்சரிசிப் பொங்கலு... பாட்டாளிக்கும் பொங்கலு..!
தைமாசத் திங்களு... இது தமிழர்களின் பொங்கலு..!
விவசாயிகளின் உழைப்பையெல்லாம் உயர்த்துகின்ற பொங்கலு..!
வயலில் வேர்வை சிந்தும் மக்களுக்கு வளம் சேர்க்கும் பொங்கலு..!

(சரணம்-1)

உலகத்துக்கே வெளிச்சம் தரும் சூரியனுக்கும் பொங்கலு..!
எருது, பசு உழைப்புக்கெல்லாம் ஏற்றந் தரும் பொங்கலு..!
உழைப்பாளிகள் விளையாடி மகிழ கரிநாளு பொங்கலு..!
பொங்கலு...பொங்கலு... இதுதான் தமிழகத்தின் பொங்கலு..!
திங்களு..திங்களு.. இதுதான் தைமாசத் திங்களு..!

(உங்களனைவருக்கும் என் பொங்கல் திருநாள் தல்வாழ்த்துகள்...)


PDF-ஆகப் பெற..!