Wednesday, 17 February, 2010

ஆனா... ஊனா... தேனா...கானா... - கானா பாடல்!


(பல்லவி)

ஆனா... ஊனா... தேனா...கானா...
என்ன பாடச் சொன்னா மீனா...
அவ காதலைச் சொன்னா தானா
நான் கரைஞ்சி போனேன் தேனா..!

(சரணம் - 1)

அவ கண்ணுக்குள்ள தெரியுதடா வண்டு..!
அவ கையும் காலும் அழகு வாழத் தண்டு..!
அவ முக அழகில் தெரியுதடா பூச்செண்டு..!
என் நெஞ்சுக்குள்ள போட்டாளடா குண்டு..! குண்டு..! குண்டு..! (ஆனா...)

(சரணம் - 2)

அவ அழகில் மயங்கிப் போனேன் நானு..!
அப்போ அவ காட்டினாடா சீனு..!
அவ துள்ளி துள்ளி ஓடயில மானு..!
அவ கைநழுவிப் போறதில மீனு..! மீனு..! மீனு..! (ஆனா...)

(சரணம் - 3)

அவ கூந்தலிலே வச்சேனடா பூவு..!
அவ இல்லாங்காட்டி நெஞ்சுக்குள்ள நோவு..!
அவ நினைப்பில் தூங்கல பல ராவு..!
அட அவதாண்டா எப்போதும் என் டாவு..! டாவு..! டாவு..!(ஆனா...)


PDF-ஆகப் பெற..!


Monday, 15 February, 2010

தினம் தினம் போனம்மா..! - கானா பாடல்


(பல்லவி)


தினம் தினம் போனம்மா..!
புது கிரெடிட் கார்டு வேணுமா..?

உன் பர்சு கனம் பார்ப்பமா..!
பர்ஸனல் லோனு வேணுமா..?

(சரணம் - 1)

பெண்:

கொஞ்சிப் பேசி நான் தாரேன்
கிரெடிட் கார்டை நீ வாங்கு..!
பந்தாவைத்தான் நீ காட்ட
பர்ஸனல் லோனை நீ வாங்கு..!

காசு பணம் தேவையில்ல
கார்டு உனக்கு போதுமடா..!
வேண்டியதை நீ வாங்கலாம்
லோனிருந்தா போதுமடா..!

(சரணம் - 2)

ஆண்:

தவணை கட்ட முடியலன்னா
தாவு தீர்ந்து போயிடும்மா..!
பணம் வட்டி குட்டி போடும்மா..!
தொகை பகையா மாறும்மா..!

தினம் தினம் போனம்மா..!
கிரெடிட் கார்டு வேணாம்மா..!
என் பர்சு கனம் போதும்மா..!
பர்ஸனல் லோனு வேணாம்மா..!

PDF-ஆகப் பெற..!


Sunday, 14 February, 2010

வேலம்மா கூட நானு வேலண்டைன் டே கொண்டாடினேன்..! - கானா பாடல்


(பல்லவி)

வேலம்மா கூட நானு வேலண்டைன் டே கொண்டாடினேன்..!
அவளுக்கு ரோஜா வாங்க காசில்லாம திண்டாடினேன்..!
கண்ணம்மா கூட நானு காதலர் தினம் கொண்டாடினேன்
அவளுக்கு கூஜா தூக்கி குஜாலாக இருந்துக்கினேன்..!

லவ்வோ லவ்வுங்கோ..! பஞ்சு மிட்டாய் லவ்வுங்கோ..!
ஜவ்வோ ஜவ்வுங்கோ..! சல்ப்பேட்டா ஜவ்வுங்கோ..!

(சரணம் - 1)

பீச்சிக்குதான் இஸ்துகினு... கன்னம் ரெண்டும் ஒட்டிகினு...
கடலைத்தான் மொறச்சிகினு... கடலையை வறுத்துகினு...
வேலம்மாவிடம் போட்டேனடா பிட்டு... காதல் பிட்டு..!
காசில்லனதும் பறந்துட்டாடா கிட்டு... அவ என்னை விட்டு..! (வேலம்மா...)

(சரணம் - 2)

ரிக்ஷாவைத்தான் இஸ்துகினு... கண்ணம்மாவை கூட்டிகினு...
பெடலைதான் மிதிச்சிகினு... மவுண்ட் ரோட்டில் ஓட்டிகினு...
கண்ணம்மாவிடம் போட்டேனடா பிட்டு... காதல் பிட்டு..!
அவ கண்ணை காட்டி மயக்கிப்புட்டா கிட்டு.. அவதான் என் சிட்டு..!

இந்த லவ்வுதான் டாப்பு.. மத்ததெல்லாம் டூப்பு... - மாமே
இந்த லவ்வுதான் டாப்பு.. மத்ததெல்லாம் டூப்பு..!   (வேலம்மா...)

(உங்க எல்லாத்துக்கும் நம்ம சார்பில் காதலர் தின வாழ்த்துக்கள் பா..)


PDF-ஆகப் பெற..!


Thursday, 11 February, 2010

மெரீனா பிச்சுலதான் காதலரு கூட்டமுங்க..! - கானா பாடல்


(பல்லவி)

மெரீனா பிச்சுலதான் காதலரு கூட்டமுங்க..!
கைய ரெண்டும் கோத்துகிட்டு போடுது ஒரு ஆட்டமுங்க!
சுனாமியே வந்தாலும் பயந்து போக மாட்டாங்க..!
சுண்டல்காரன் வந்தா மட்டும் சுறுசுறுன்னு விழிப்பாங்க..!

(சரணம் - 1)

காத்து மழை அடிச்சாலும்...  வெட்ட வெயில் அடிச்சாலும்...
சத்தமே போட்டாலும்... சளைக்கவே மாட்டாங்க..!
கன்னம் கன்னம் ஒட்டிகிட்டு... காலு ரெண்டும் பின்னிகிட்டு
கழுத்து மேல கைய போட்டு... காதலைத்தான் வளர்ப்பாங்க..! (மெரீனா...)

(சரணம் - 2)

புயல் மணல் அடிச்சாலும்... பூகம்பமே வந்தாலும்...
போலீஸே வந்தாலும்... பிரிஞ்சி போக மாட்டாங்க...
அப்பனையும் நினைக்காம... அம்மாவையும் நினைக்காம...
குடும்பத்தை நினைக்காம... குஜாலாதான் இருப்பாங்க..!  (மெரீனா...)

PDF-ஆகப் பெற..!


Wednesday, 10 February, 2010

காலம் இப்போ மாறிப் போச்சு கண்ணு..! - கானா பாடல்

 

(பல்லவி)

காலம் இப்போ மாறிப் போச்சு கண்ணு..!
அட கம்ப்யூட்டருல சிரிக்கிறாடா பொண்ணு..!
அத நம்பிப் போனா ஆயிடுவ மண்ணு..!
நான் சொல்லுறத நல்லா கேளு கண்ணு..!

(சரணம் - 1)

உலக அறிவை வளர்க்கதாண்டா இன்டர்நெட்டு..!
அதுல போயி பண்ணுறாண்டா காதல் சாட்டு..!
அறிவை இழந்து அதுல போயி கொட்றான் துட்டு..!
மீறி ஆளைத் தேடி போனான்னாக்கா ஆளே அவுட்டு..! (காலம்...)

(சரணம் - 2)

நெட்டில் காதலுன்னு சொல்லிக்கிட்டு பிட்டு படம் காட்டறான்..!
நாம்மாளுந்தான் துட்டை கட்டி வாயப் பொளந்து பாக்கறான்..!
கம்யூட்டரே கதியின்னு காலம் முழுசும் கெடக்கிறான்..!
வாழ்கை சீரழிவது தெரியமா காமத்துல மிதக்குறான்..! (காலம்...)

PDF-ஆகப் பெற..!


Monday, 8 February, 2010

துபாய் போன மச்சான் பேரு கபாலி..! - கானா பாடல்


(பல்லவி )


துபாய் போன மச்சான் பேரு கபாலி..!
துட்டு சேக்க அவன் படுற பாடு தலைவலி..!
ஒட்டகத்தை மேய்ச்சாதாண்டா தினக் கூலி..!
நம்ம ஷோக்காலி அங்க ஆனனாடா சீக்காலி..!

(சரணம்- 1)

மச்சி குல்லா போடும் வேலை உனக்கு எதுக்குடா..?
வளைகுடா நாட்டுல முதுகு வளைவு எதுக்குடா..?
நம் நாட்டுலயே நெறைய வேலை இருக்குடா..!
காசு குறையானாலும் உன்னாடுங்கறது மிடுக்குடா..!
(துபாய் போன..)


(சரணம்- 2)

அங்கே கசக்கி பிழியும் கஸ்மாலங்க நிறையடா..!
இங்கே உழைச்சா போதும் நம்ம நாடு செழிக்குண்டா..!
வெய்ய நாட்டில் வெந்து போவதெதுக்குடா..!
நம்ம மக்களோட வாழ்வதுதான் சிறப்புடா..! (துபாய் போன..)

(சரணம் 3)

அம்மா அப்பா பாசம் அங்கே இருக்குமா..?
அன்பு மனைவியோட அரவணைப்பு  கிடைக்குமா..?
உன் குழந்தைகளின் குறும்பை ரசிக்க முடியுமா..?
வேணான்டா கபாலி வெளிநாடு..!
உழைப்பதுல நீதாண்டா பெரியாளு..! (துபாய் போன..)

(அன்பான அயல் நாடு வாழ் நண்பர்களுக்கு, தங்களை குறை கூறி எழுதப்பட்டதல்ல இப்பாடல்... நம் நாட்டினில் நம்மவர்கள் உழைக்க வேண்டுமென்கிற ஒரு இந்தியனின் ஆசை..)

PDF-ஆகப் பெற..!


Thursday, 4 February, 2010

கெடச்ச வரை லாபமுன்னு சுருட்டுதடா உலகம்..! - கானா பாடல்

(பல்லவி)

கெடச்ச வரை லாபமுன்னு சுருட்டுதடா உலகம்..!
நம் காலை வாரி விட்டபடி மூட்டுதடா கலகம்..!
பொது நலத்தை கொன்று தின்னும் கொடூரமான உலகம்..!
இந்த சுயநல அரக்கனுக்கு இல்லையடா மரணம்..!

(சரணம் - 1)

பதவி மேல ஆச வச்சி ஆளை காலி பண்ணுது
பொருளு மேல ஆச வச்சி பொட்டியத்தான் தூக்குது
பொண்ணு மேல ஆச வச்சி மிருகமாக மாறுது
மண்ணு மேல ஆச வச்சி மண்ணாகிப் போகுது..!  (கெடச்ச வரை... )

(சரணம் -2)

சொத்துக்காக அப்பனையே கண்டபடி உதைக்குது
பெத்தவன்னு பாக்காம விரட்டிதான அடிக்குது..!
காசுக்காக கட்டினவளை வீட்டை விட்டு விரட்டுது
மனித மனம் மிருகமாகி வேதனையை கூட்டுது..!  (கெடச்ச வரை... )


PDF-ஆகப் பெற..!