Monday 30 November, 2009

தாவணியைப் பார்த்து இங்க பல வருஷமாச்சு..! - கானா பாடல்

(பல்லவி)

தாவணியைப் பார்த்து இங்க பல வருஷமாச்சு
சுடிதாரும் ஜீன்சும் இங்கே பேஷனாகிப் போச்சு
அச்சம் மடம் நாணமெல்லாம் அல்பாயுசுல போச்சு
அல்டாப்பும் பீட்டரும்தான் பிகரின் பேஷனாச்சு...

(சரணம் - 1)


குடத்தை எடுத்து நடக்கும் அழகு அப்பங்கோ
குண்டு பூசணி உடம்பிருக்குது இப்பங்கோ...
அன்ன நடை நடப்பதெல்லாம் அப்பங்கோ...
ரோடு அதிர நடக்குதுங்க இப்பங்கோ...
ஸ்டூல போட்டு நடக்குதுங்க இப்பங்கோ... (தாவணியைப்…)

(சரணம் - 2)

உதடு சிவக்க சிரிப்பதெல்லாம் அப்பங்கோ
உதட்டுல சிவப்பு சாயம் பூசுதுங்கோ இப்பங்கோ...
தலையில் மல்லியப்பூ வப்பதெல்லாம் அப்பங்கோ...
தலையில் கிராப்பு அடிச்சு சுத்துங்க இப்பங்கோ...
ரோட்டுல தலைவிரிச்சு சுத்துங்கோ இப்பங்கோ... (தாவணியைப்…)



PDF-ஆகப் பெற..!


காதல் ஒரு மாயவலை..! - கானா பாடல்..!

(பல்லவி)

காதல் ஒரு மாய வலை..!
கண்ணா நீயும் மயங்கிடாத..!
காதல் விரிக்கும் கன்னி வலை..!
கண்ணா நீயும் கவுந்துடாத..!
சிரிப்பு சிரிச்சி ஏமாத்துண்டா..!
உன்னை செல்லக்காசா ஆக்கிடும்டா..!
காதல் ஒரு மாய வலை..!
கண்ணா நீயும் மயங்கிடாத..!

(சரணம் - 1)


தெருவில் நடந்து போறவளை
உசிரக் கொடுத்து நேசிப்பதைவிட
கருவில் உன்னை சுமந்தவளை
காலம் முழுக்க நேசிக்கணுன்டா..!
உருக் கொடுத்த உத்தமத் தாயை
உசிரிருக்கும் வரை மறக்காம இருக்கணுன்டா..!              
அன்பு காட்ட உன் அம்மா இருக்காடா...
அவளைப் போல தெய்வம் வேற யாரடா..!

(காதல் ஒரு...)

(சரணம் - 2)

கண்ணைக் காட்டி போனவளை
காலம் முழுக்க நேசிப்பதை விட...
கண்ணைப் போல உன்னைக் காத்த
உங்கப்பனை நீயும் நேசிக்கணுன்டா..!
காதல் பித்து பிடிக்க வச்சி கண்ணாமூச்சி காட்டுவாடா..
அண்ணன் சொன்னார்...அப்பா சொன்னாருன்னு
கடைசியில் உன்னை அம்போன்னு விட்டுடுவாடா..!

(காதல் ஒரு...)

PDF-ஆகப் பெற..!


Monday 2 November, 2009

ஷேர் ஆட்டோ... ஷேர் ஆட்டோ..! - கானா பாடல்





(பல்லவி)

ஷேர் ஆட்டோ... ஷேர் ஆட்டோ..!
மஞ்சக் கலரு ஷேர் ஆட்டோ..!
வளைஞ்சி நெளிஞ்சி ஓடுது பார்
ஊரு முழுக்க ஷேர் ஆட்டோ..!
கொஞ்ச தூரம் போகணும்னா அஞ்சு ரூபா தரணும் நீங்க..!
ரொம்ப தூரம் போகணும்னா பத்து ரூபா தரணும் நீங்க..!

(சரணம் - 1)

மாநகர பஸ்ஸையெல்லாம் முந்திகிட்டு போகுமுங்க...
நெரிசல் கூட்டத்திலயும் நேக்காக போகுமுங்க...
நெருக்கி உக்காந்துட்டா டிரைவர் மனசு நிறையுமுங்க...
நெருக்கடி காலத்துல கைகொடுக்கும் தோழனுங்க..!

(ஷேர் ஆட்டோ...)

(சரணம் - 2)

ராவு பகல் பார்க்காம ராட்டினம் போல் சுத்துமுங்க...
கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கின்ற தோழனுங்க...
ஒற்றுமையை உணர்த்துகின்ற உண்மையான வாகனங்க...
ஒண்ணாக பயணம் செஞ்சா உங்க செலவு குறையுமுங்க..!

(ஷேர் ஆட்டோ...)

PDF-ஆகப் பெற..!