Thursday 2 June, 2011

மலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..! - கானா பாடல்(பல்லவி)


மலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா...
ஒரு பூக்கூடையே வாங்கித் தாறேன் வாரியா..?
உலகில் உள்ள பூக்கள் ஒண்ணா பூத்தாலும்
உன் பூச்சிரிப்புக்கு முன்னே எல்லாம் மண்ணாகும்..!

(சரணம் - 1)


நட்சத்திர பூவைப் போல கண்ணை நீயும் சிமிட்டுற...
கண்ணடிச்சா காட்டு மல்லி போல ஏண்டி மொறைக்கிற...
தாமரைப்பூ தண்ணி போல என் மனசு ஆடுது...
நிலவைத் தேடும் அல்லி போல உம் மனசை தேடுது...
அடி பூமலரே உனக்கேத்த ஜோடி இங்கே யாரடி...
உன் பூமனசை திருடப் போகும் கேடி இவன்தானடி..!


மலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா...
ஒரு பூக்கூடையே வாங்கித் தாறேன் வாரியா..?


(சரணம் - 2)


ஊட்டி மலை ரோஸு போல ஜிலு ஜிலுன்னு இருக்கிற...
காஷ்மீர் மலை பூவை போல கல கலன்னு சிரிக்கிற...
மல்லியப்பூ பந்தைப் போல கன்னம் ரெண்டும் இருக்குது...
செவ்வரளி பூவைப் போல உன் லிப்ஸு என்னை மயக்குது...
அட பூந்தோட்டமே உனக்கு நான் காவலாக இருக்கவா..?
உன் புருஷனாகி பூவையெல்லாம் தலையிலதான் சூடவா..!? 


மலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா...
ஒரு பூக்கூடையே வாங்கித் தாறேன் வாரியா..?
உலகில் உள்ள பூக்கள் ஒண்ணா பூத்தாலும்
உன் பூச்சிரிப்புக்கு முன்னே எல்லாம் மண்ணாகும்..!


PDF-ஆகப் பெற..!


Saturday 2 April, 2011

உலகக்கோப்பை கிரிக்கெட்டுல இந்தியாதான் வின்னு..! - கானா பாடல்


(பல்லவி)


உலகக்கோப்பை கிரிக்கெட்டுல இந்தியாதான் வின்னு..!
இப்போட்டியில் இலங்கை அணி கவ்வப் போவுது மண்ணு..!
மும்பை நகரம் கிரிக்கெட்டால பிதுங்குது கண்ணு..!
தங்கத்தால உலக கோப்பை மின்னுது பொண்ணு..!

(சரணம் - 1)


சச்சின் அடிக்கும் பந்து எல்லாம் ராக்கெட் ஆகும் நொடியில..!
ஷேவாக் அடிக்கும் பந்து எல்லாம் மைதானத்து வெளியில..!
அடி அடி சச்சின் அடி... ஷேவாக் அடி வாணவெடி..!

காம்பீர் அடிக்கும் பந்தை எல்லாம் பிடிக்கத்தான முடியல..!
கோஹ்லி விரட்டும் பந்தை எல்லாம் தடுக்க கூட வழியில்ல..!
அடி அடி பந்தை அடி... பவுண்டரியை பார்த்து அடி..!

யுவராஜ் சிங்கு அடிப்பதெல்லாம் சிக்ஸராகும் கைப்புள்ள..!
ரெய்னா வந்தால் சுத்தியடிப்பார் யாரும் பிடிக்க வழியில்ல..!
அடி அடி யுவராஜ் அடி... அந்தரத்தில் யானை வெடி..!

தோனியோட தலைமையில நம்ம இந்தியாதான் வின்னு..!
இப்போட்டியில் இலங்கை அணி கவ்வப் போவுது மண்ணு..!

(சரணம் - 2)


நம்ம ஜாகீர் பந்து வீச்சினிலே ஸ்டம்பு எல்லாம் உடையுது..!
முனாப் பந்து வீசினாக்கா ஸ்டம்பு எல்லாம் கதறுது..!
ஸ்ரீசாந்தின் பந்து வீச்சில் நெருப்பு பொறி பறக்குது..!
ஹர்பஜனின் பந்து வீச்சில் இலங்கை அணி சுருளுது..!

உலக்கோப்பை நமக்குதானே இந்தியாவே கை தட்டு..!
இலங்கைகுத்தான் சொல்லுறமே நண்பா நீ கெட்அவுட்டு..!


PDF-ஆகப் பெற..!


Friday 31 December, 2010

நட்ட நாடு சாமத்துல பிறக்குதுடா புத்தாண்டு..! - புத்தாண்டு சிறப்பு கானா பாடல்


(பல்லவி)

நட்ட நாடு சாமத்துல பிறக்குதுடா புத்தாண்டு..! 
உலகத்தோட சேர்ந்து நீயும் உற்சாகமா கொண்டாடு..!
சாதி, மத, பேதமின்றி எல்லோருடன் கொண்டாடு 
இனி நல்லதே நடக்கும்னு கானா பாடு..! நீயும் தானா பாடு..! 

(சரணம் - 1)

உலக மக்கள் எல்லோருக்கும் இந்நாள் ஒரு திருநாள்...
மொழி மறந்து, நிறம் மறந்து வாழ்த்தும் ஒரு வளநாள்...
துன்பத்தினை மறந்து விட , இன்பத்தினை சேர்த்து விட
இனிப்புகளை கொடுத்து விட பிறக்குது ஒரு புது நாள்... 
எல்லோரும் கொண்டாடும் குதுகலமான நாள்..! 

(சரணம் - 2)

புத்தாண்டை நீயும் கொண்டாடு..!
புது மனுசனாக நீயும் மாறு..!
கஷ்டத்தெல்லாம் தூக்கி போடு..!
விஷ் யு ஹேப்பி நியூ இயருன்னு பாடு..! 
வந்துடிச்சி டூ தௌசன் லெவனு..!
இனி வாழ்கையில நாம வின்னு..!


(இனிய இணைய வாசகர்களுக்கும், கானா ரசிகர்களுக்கும் எனது மனதிற்கினிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2010)


PDF-ஆகப் பெற..!


Wednesday 22 December, 2010

கடலுக்குள்ள போய் வருவோம்..! - கானா பாடல்


(பல்லவி)

கடலுக்குள்ள போய் வருவோம்
கட்டுமரத்தை சேர்த்திழுப்போம்....
வாடா நண்பா வலைய வீசலாம்...
வகை வகையா மீனை பிடிக்கலாம்...!

(சரணம்-1)
எறா... நண்டு கிடைச்சாதானே
இன்னைக்கு நமக்கு சோறு...
அது எப்படி கிடைக்கும் கூறு..?

சுறா கூட்டம் போகுதடா
நீயும் அங்கே பாரு...
எட்டி வீசு வலைய நல்லா
எல்லாம் மாட்டும் பாரு... அட
அந்த எறா மாட்டும் பாரு..!  (கடலுக்குள்ளே...!)

(சரணம்-2)
புயலில் சிக்கிய படகு போல
நம் வாழ்க்கை ஆனது பாரு...
அதை கரை சேர்ப்பது யாரு..?

நல்லா உழைச்சி முன்னுக்கு வந்தா
நம்ம வாழ்க்கை செழிக்கும் பாரு
இந்த கடலன்னை இருக்கும் வரை
நமக்கு கவலை ஏது கூறு..!  (கடலுக்குள்ளே...!)

(இரண்டு மீனவ நண்பர்கள் பாடுவது போல் எழுதியிருக்கிறேன்... பிடித்திருந்தால் பாடி மகிழவும்..!)PDF-ஆகப் பெற..!


Tuesday 30 November, 2010

மயக்கும் மாலையிலே… மார்கழி மாசத்திலே..! - கானா பாடல்

(பல்லவி)

மயக்கும் மாலையிலே… மார்கழி மாசத்திலே…
மங்கையவள் ஓரக்கண்ணால் சிரிக்கிறா…
மாமன் மயங்கிபுட்டா... முந்தானையால் அடிக்கிறா…
மனசை கிள்ளி கிள்ளி... என்னை அவ மயக்குறா..!

(சரணம் - 1)

காதல் ஒரு போதையடா… பார்த்தாலே ஏறுதடா…
பாக்காம பார்த்துப்புட்டா படபடப்பு கூடுதடா...
கன்னி ராணி அவதாண்டா… கட்டழகியும் அவதாண்டா…
சிட்டாகப் பறந்துபுட்டா சோகம் என்னை வாட்டுதடா… (மயக்கும்…)

( சரணம் - 2)

ராசாத்தி நினைப்புலதான் ராப்பொழுது தூங்கலடா…
என்னிரவைப் பகலாக்கி துன்பத்தை எனக்கு காட்டுறாடா...
கண்ணி வலை விரிச்சபடி என் கண்ணோடு கலந்தாடா...
கண்ணுக்குள்ள இருந்துகிட்டு காதல் போதை ஏத்தறாடா..! (மயக்கும்…)

PDF-ஆகப் பெற..!


Friday 4 June, 2010

மத்தியான வெயிலு இங்க மண்டையத்தான் பொளக்குது..! - கானா பாடல்

(பல்லவி)

மத்தியான வெயிலு இங்க மண்டையத்தான் பொளக்குது..!
கத்திரி போட்ட வெயிலு இங்க கண்ணாமூச்சி காட்டுது..!
உடலில் உள்ள வியர்வை இங்க உழைக்காமலே வழியுது..!
கடலில் வீசும் காத்து இங்க கடும் வெப்பமாக மாறுது..!
(சரணம் - 1)

உடம்பு எல்லாம் கொப்பளமா ஆகுது..!
வியர்வையால உப்பளமா மாறுது..!
சுட்ட அப்பளமா நம்ம பூமி வேகுது..!
வெப்பத்தால நீர் வறண்டு போகுது..! (மத்தியான...)

(சரணம் - 2)

எரிமலையும் இவ்வெயிலும் ஒண்ணு..!
மரத்த நாம வளக்கணும்டா கண்ணு..!
மழையில்லன்னா நாம எல்லாம் மண்ணு..!
மனசிலதான் நீயும் இதை எண்ணு..! (மத்தியான...)

(சரணம் - 3)

பூமித்தாயை காக்க வேணும் நாமதான்..!
அவளை விட பொறுமைசாலி யாருதான்
பூமி மாசை தடுத்தாலே போதும்தான்..!
வெப்பமெல்லாம் தானா குறையும் ஜோருதான்..! (மத்தியான...)
 


PDF-ஆகப் பெற..!


Wednesday 17 February, 2010

ஆனா... ஊனா... தேனா...கானா... - கானா பாடல்!


(பல்லவி)

ஆனா... ஊனா... தேனா...கானா...
என்ன பாடச் சொன்னா மீனா...
அவ காதலைச் சொன்னா தானா
நான் கரைஞ்சி போனேன் தேனா..!

(சரணம் - 1)

அவ கண்ணுக்குள்ள தெரியுதடா வண்டு..!
அவ கையும் காலும் அழகு வாழத் தண்டு..!
அவ முக அழகில் தெரியுதடா பூச்செண்டு..!
என் நெஞ்சுக்குள்ள போட்டாளடா குண்டு..! குண்டு..! குண்டு..! (ஆனா...)

(சரணம் - 2)

அவ அழகில் மயங்கிப் போனேன் நானு..!
அப்போ அவ காட்டினாடா சீனு..!
அவ துள்ளி துள்ளி ஓடயில மானு..!
அவ கைநழுவிப் போறதில மீனு..! மீனு..! மீனு..! (ஆனா...)

(சரணம் - 3)

அவ கூந்தலிலே வச்சேனடா பூவு..!
அவ இல்லாங்காட்டி நெஞ்சுக்குள்ள நோவு..!
அவ நினைப்பில் தூங்கல பல ராவு..!
அட அவதாண்டா எப்போதும் என் டாவு..! டாவு..! டாவு..!(ஆனா...)


PDF-ஆகப் பெற..!