Thursday 2 June, 2011

மலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..! - கானா பாடல்



(பல்லவி)


மலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா...
ஒரு பூக்கூடையே வாங்கித் தாறேன் வாரியா..?
உலகில் உள்ள பூக்கள் ஒண்ணா பூத்தாலும்
உன் பூச்சிரிப்புக்கு முன்னே எல்லாம் மண்ணாகும்..!

(சரணம் - 1)


நட்சத்திர பூவைப் போல கண்ணை நீயும் சிமிட்டுற...
கண்ணடிச்சா காட்டு மல்லி போல ஏண்டி மொறைக்கிற...
தாமரைப்பூ தண்ணி போல என் மனசு ஆடுது...
நிலவைத் தேடும் அல்லி போல உம் மனசை தேடுது...
அடி பூமலரே உனக்கேத்த ஜோடி இங்கே யாரடி...
உன் பூமனசை திருடப் போகும் கேடி இவன்தானடி..!


மலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா...
ஒரு பூக்கூடையே வாங்கித் தாறேன் வாரியா..?


(சரணம் - 2)


ஊட்டி மலை ரோஸு போல ஜிலு ஜிலுன்னு இருக்கிற...
காஷ்மீர் மலை பூவை போல கல கலன்னு சிரிக்கிற...
மல்லியப்பூ பந்தைப் போல கன்னம் ரெண்டும் இருக்குது...
செவ்வரளி பூவைப் போல உன் லிப்ஸு என்னை மயக்குது...
அட பூந்தோட்டமே உனக்கு நான் காவலாக இருக்கவா..?
உன் புருஷனாகி பூவையெல்லாம் தலையிலதான் சூடவா..!? 


மலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா...
ஒரு பூக்கூடையே வாங்கித் தாறேன் வாரியா..?
உலகில் உள்ள பூக்கள் ஒண்ணா பூத்தாலும்
உன் பூச்சிரிப்புக்கு முன்னே எல்லாம் மண்ணாகும்..!


PDF-ஆகப் பெற..!


8 comments:

Natu said...

m...m.....m

Nalla iruku Paadakaree.........

Asathunka

By

Bhuvana

மோகனன் said...

நன்றி.. நன்றி...

நான் பாடகரல்ல... பாடல் எழுதுபவர்...

cheena (சீனா) said...

அன்பின் மோகனன் - கானாப் பாட்டு நன்றாகவே இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மோகனன் said...

நன்றி தோழரே...

Unknown said...

பாடல் மிக அருமை நண்பா ஆனால் இசையுடன் கேட்டால் தான் இணிமையாக இருககும்

மோகனன் said...

நன்றி கண்ணன்...

முயற்சியுங்கள் உங்களுக்கு இசை அம்சம் இருந்தால்...

Anonymous said...

புதுமையான முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !

மோகனன் said...

நன்றிங்க ஸ்வர ராணி...