Saturday, 2 April 2011

உலகக்கோப்பை கிரிக்கெட்டுல இந்தியாதான் வின்னு..! - கானா பாடல்


(பல்லவி)


உலகக்கோப்பை கிரிக்கெட்டுல இந்தியாதான் வின்னு..!
இப்போட்டியில் இலங்கை அணி கவ்வப் போவுது மண்ணு..!
மும்பை நகரம் கிரிக்கெட்டால பிதுங்குது கண்ணு..!
தங்கத்தால உலக கோப்பை மின்னுது பொண்ணு..!

(சரணம் - 1)


சச்சின் அடிக்கும் பந்து எல்லாம் ராக்கெட் ஆகும் நொடியில..!
ஷேவாக் அடிக்கும் பந்து எல்லாம் மைதானத்து வெளியில..!
அடி அடி சச்சின் அடி... ஷேவாக் அடி வாணவெடி..!

காம்பீர் அடிக்கும் பந்தை எல்லாம் பிடிக்கத்தான முடியல..!
கோஹ்லி விரட்டும் பந்தை எல்லாம் தடுக்க கூட வழியில்ல..!
அடி அடி பந்தை அடி... பவுண்டரியை பார்த்து அடி..!

யுவராஜ் சிங்கு அடிப்பதெல்லாம் சிக்ஸராகும் கைப்புள்ள..!
ரெய்னா வந்தால் சுத்தியடிப்பார் யாரும் பிடிக்க வழியில்ல..!
அடி அடி யுவராஜ் அடி... அந்தரத்தில் யானை வெடி..!

தோனியோட தலைமையில நம்ம இந்தியாதான் வின்னு..!
இப்போட்டியில் இலங்கை அணி கவ்வப் போவுது மண்ணு..!

(சரணம் - 2)


நம்ம ஜாகீர் பந்து வீச்சினிலே ஸ்டம்பு எல்லாம் உடையுது..!
முனாப் பந்து வீசினாக்கா ஸ்டம்பு எல்லாம் கதறுது..!
ஸ்ரீசாந்தின் பந்து வீச்சில் நெருப்பு பொறி பறக்குது..!
ஹர்பஜனின் பந்து வீச்சில் இலங்கை அணி சுருளுது..!

உலக்கோப்பை நமக்குதானே இந்தியாவே கை தட்டு..!
இலங்கைகுத்தான் சொல்லுறமே நண்பா நீ கெட்அவுட்டு..!


PDF-ஆகப் பெற..!


6 comments:

தமிழ்த்தோட்டம் said...

இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள்

Raj said...

No need of 4 words... Awesome... its enough...

மோகனன் said...

வாழ்த்திய தமிழ் தோட்டத்திற்கு நன்றிகள்

மோகனன் said...

நன்றி திரு ராஜ் அவர்களே...

Unknown said...

Nice share to every Indian.எதிரிய அடிச்சி அனுப்பியாச்சி துரோகியா என்ன பண்ண போறோம்.
டோனி &கோ வெற்றி பெற வாழ்த்துக்கள்..

மோகனன் said...

வருகைக்கு நன்றி வினோத்...

பிணம் தின்னி கழுகுகள் உள்ளவரை நாம் பிழைத்திருக்க போராடித்தான் ஆகவேண்டும்... அதுதான் என் பதில்...