Friday 31 December, 2010

நட்ட நாடு சாமத்துல பிறக்குதுடா புத்தாண்டு..! - புத்தாண்டு சிறப்பு கானா பாடல்


(பல்லவி)

நட்ட நாடு சாமத்துல பிறக்குதுடா புத்தாண்டு..! 
உலகத்தோட சேர்ந்து நீயும் உற்சாகமா கொண்டாடு..!
சாதி, மத, பேதமின்றி எல்லோருடன் கொண்டாடு 
இனி நல்லதே நடக்கும்னு கானா பாடு..! நீயும் தானா பாடு..! 

(சரணம் - 1)

உலக மக்கள் எல்லோருக்கும் இந்நாள் ஒரு திருநாள்...
மொழி மறந்து, நிறம் மறந்து வாழ்த்தும் ஒரு வளநாள்...
துன்பத்தினை மறந்து விட , இன்பத்தினை சேர்த்து விட
இனிப்புகளை கொடுத்து விட பிறக்குது ஒரு புது நாள்... 
எல்லோரும் கொண்டாடும் குதுகலமான நாள்..! 

(சரணம் - 2)

புத்தாண்டை நீயும் கொண்டாடு..!
புது மனுசனாக நீயும் மாறு..!
கஷ்டத்தெல்லாம் தூக்கி போடு..!
விஷ் யு ஹேப்பி நியூ இயருன்னு பாடு..! 
வந்துடிச்சி டூ தௌசன் லெவனு..!
இனி வாழ்கையில நாம வின்னு..!


(இனிய இணைய வாசகர்களுக்கும், கானா ரசிகர்களுக்கும் எனது மனதிற்கினிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2010)


PDF-ஆகப் பெற..!


2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நண்பரே...புத்தாண்டு கானா நனறாக உள்ளது
என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

மோகனன் said...

நன்றிங்க தோழரே...

அடிக்கடி கானா படிக்க... இல்ல... கானா பாட வாங்க..!