(பல்லவி)
கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - அங்கேகோகிலாவின் கரகமணி ஆட்டம்...
பெரிசு... சிரிசுங்கல்லாம் நோட்டம்...
அவ மேல நோட்டம்..!
கோகிலாவை மடக்க நோட்டை நீட்டும்..!
ரூபா நோட்டை நீட்டும்..!
போடு...கோவிலிலே... கோவிலிலே...
கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - அங்கே
கோகிலாவின் கரகமணி ஆட்டம்..!
(சரணம்-1)
குத்துறாளே கும்மாங்குத்து ஆட்டம்அவ குலுங்கி வரும் ஆப்பிள் பழத்தோட்டம்..!
அவ பாடினாக்கா சிலுசிலுக்குது கூட்டம்
அவ பார்த்தாலே காதல் பனி மூட்டம்...
மனசுக்குள் ஆடுதடா காமக் களியாட்டம்..!
போடு... கோவிலிலே... கோவிலிலே...
கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - அங்கே
கோகிலாவின் கரகமணி ஆட்டம்..!
(சரணம்-2)
ஊரே அவ அழகில் மாட்டும் - அவளுக்கு
இந்த மச்சக்காளை மேலதான நாட்டம்..!
உன்னழகில் எங்கண்ணு ரெண்டும் கூசும்..!
வாடி நீயும் நானும் போடலாம் ஒரு ஆட்டம்..!
போடு... கோவிலிலே... கோவிலிலே...
கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - அங்கே
கோகிலாவின் கரகமணி ஆட்டம்..!
பெரிசு... சிரிசுங்கல்லாம் நோட்டம்...
அவ மேல நோட்டம்..!
அவ மேல நோட்டம்..!
கோகிலாவை மடக்க நோட்டை நீட்டும்..!
ரூபா நோட்டை நீட்டும்..!
PDF-ஆகப் பெற..!
4 comments:
டண்டணக்கா டண்டணக்கான்னு பின்னிப் பெடலெடுக்கிறீங்க அண்ணாத்தே! கரகப்பாட்டுப்படிச்சு மனசு சுத்துது.....!
வாங்க சேட்டை
இது நம்ம கானா கோட்டை...
தினம் ஒரு கானா பாட்டு உமக்கு வேட்டை...
ஷோக்காகீது உன் கருத்து மூட்டை
அடிக்கடி வாங்க சேட்டை..!
nalla paattu. kalakkuringka . kaana nalla vanthirukku .
அன்பு நண்பர் மதுரை சரவணன் அவர்களே...
தங்களின் வருகையும், வாழ்த்தும் எனக்கு மகிழ்வை ஊட்டுகின்றன...
அடிக்கடி கானா படிக்க இல்லை... கானா பாட வாங்க..!
Post a Comment