Wednesday, 13 January 2010

பச்சரிசிப் பொங்கலு... பாட்டாளிக்கும் பொங்கலு..! - கானா பாடல்!




(பல்லவி)

பச்சரிசிப் பொங்கலு... பாட்டாளிக்கும் பொங்கலு..!
தைமாசத் திங்களு... இது தமிழர்களின் பொங்கலு..!
விவசாயிகளின் உழைப்பையெல்லாம் உயர்த்துகின்ற பொங்கலு..!
வயலில் வேர்வை சிந்தும் மக்களுக்கு வளம் சேர்க்கும் பொங்கலு..!

(சரணம்-1)

உலகத்துக்கே வெளிச்சம் தரும் சூரியனுக்கும் பொங்கலு..!
எருது, பசு உழைப்புக்கெல்லாம் ஏற்றந் தரும் பொங்கலு..!
உழைப்பாளிகள் விளையாடி மகிழ கரிநாளு பொங்கலு..!
பொங்கலு...பொங்கலு... இதுதான் தமிழகத்தின் பொங்கலு..!
திங்களு..திங்களு.. இதுதான் தைமாசத் திங்களு..!

(உங்களனைவருக்கும் என் பொங்கல் திருநாள் தல்வாழ்த்துகள்...)


PDF-ஆகப் பெற..!


5 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

settaikkaran said...

அண்ணாத்தே! பின்னிப் பெடல் எடுக்கறீங்க போங்க! ஜூப்பர்!

மோகனன் said...

அன்பான உலவிற்கு...

உமது வாழ்த்திற்கு மிக்க நன்றி

மோகனன் said...

அன்பான துபாய் ராஜா அவர்களுக்கு...

தங்களது வருகைகுக்கும், வாழ்த்திற்கும், என் பணிவான நன்றிகள் பற்பல..

அடிக்கடி கானா படிக்க வாங்க..!

மோகனன் said...

அன்பான சேட்டைக்கார அண்ணாத்தேவிற்கு...

வணக்கம்பா... சும்மா சொல்லக் கூடாது... படா ஷோக்கா கீதுப்பா... நீ வாழ்த்துனது..

நம்மளாண்ட இணைஞ்சது எல்லாம்... படா குஜாலா கீது...

அடிக்கடி நம்ம வூட்டுக்கு வந்துட்டு போ அண்ணாத்தே...