Thursday 17 December, 2009

பலவிதமா பள்ளிக் கூடம் இருக்குது..! - கானா பாடல்

(பல்லவி)

பலவிதமா பள்ளிக் கூடம் இருக்குது..!
பரபரப்பா பிள்ளைங்கதான் படிக்குது
மெட்ரிகுலேசன் பீஸு நிறைய வாங்குது
பெத்தவங்க உழைப்பு அங்க போகுது..!

(சரணம் - 1)

(பிள்ளைங்களை) கார்பரேசன் ஸ்கூலில் சேக்க மறுக்குது
பீட்டர் விடும் பள்ளியத்தான் தேடுது..!
இங்கே தங்கத் தமிழ் பள்ளி தடுமாறுது..!
தஸ்ஸு புஸ்ஸு இங்கிலீஷ் பள்ளிய நாடுது..!

(சரணம் - 2)

நல்லபடிப்பு எங்கிருந்தாலும் ஏறும்..!
ஏற்றத்தாழ்வு இதுல மறைய வேணும்..!
எல்லோருக்கும் ஒரே கல்வி வரணும்..!
படிப்புக்கேத்த வேலை கிடைக்க வேணும்..!

PDF-ஆகப் பெற..!


2 comments:

cheena (சீனா) said...

கானாப் பாடல் நன்று - பள்ளியினைப் பற்றிய பாடல் - நல்வாழ்த்துகள் மோகனன் - நட்புடன் சீனா

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு நன்றி தோழா...