Wednesday 23 September, 2009

விலைவாசி விஷம் போல ஏறுது..! - கானா பாடல்

(பல்லவி)

விலைவாசி விஷம் போல ஏறுது..!
ஏழை சனம் பட்டினியால் வாடுது..!
அரிசி விலை, பருப்பு விலை அதிகரிச்சி நிக்குது..!
அதிகவிலை தராததால காய்கறியும் சிரிக்குது..!


(சரணம் - 1)

பதுக்கலு கூட்டம் இங்க பலவேலை பாக்குது..!
விலையும் அதனால விமானம் போல ஏறுது..!
பாலு விலையேறி பாலகன் வயித்தை சுருக்குது..!
பாவப்பட்ட ஏழை சனம் பரிதவிச்சி நிக்குது..! (விலைவாசி...)


(சரணம் - 2)

உழைக்கும் வர்க்கம் இங்கே உடம்பு தேய உழைக்குது...
அதன் வியர்வை இங்கே ரத்தமாகி ஆறு போல ஓடுது..!
பணக்கார கூட்டமிங்கே பணத்தை காட்டி ஏய்க்குது..!
பாவப்பட்ட ஏழைசனங்க வறுமையால வாடுது..!(சில்லறை...)

PDF-ஆகப் பெற..!


No comments: