Tuesday, 22 September 2009

சில்லறை போலத்தானே சிரிக்குற..! - கானா பாடல்

(பல்லவி)

சில்லறை போலத்தானே சிரிக்குற..!
சிக்கனமா துணியை போட்டு மயக்குற..!
கண்ணால காதல் போதை ஏத்துற..!
கபால்னு எம்மனசை மாத்துற..!


(சரணம் - 1)

ஆர்ப்பாட்டம் இல்லாம... அங்க இங்க துள்ளாம...
அம்சமா நடந்து வந்து காட்டுற..!
நம்ம ஐஸ்வர்யா ராயாட்டம் அசத்துற..!
இந்த மாமனை அசால்டாக அசத்துற..! (சில்லறை...)


(சரணம் - 2)

தூண்டிலும் இல்லாம... வலை கிலை இல்லாம...
வெறும் கண்ணால காதல் வலை வீசுற..!
கண்ணழகி மீனா போல அசத்துற..!
அப்படியே மாமனை மயக்கி இழுக்குற..! (சில்லறை...)



PDF-ஆகப் பெற..!


2 comments:

ILA (a) இளா said...

நீண்ட நேரம், எல்லாப் பதிவுகளையும் படித்தேன். தொடருங்கள்

மோகனன் said...

தோழர் ILA அவர்களுக்கு...

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...

இந்த ஊக்கம்தான் என்னை மென்மேலும் எழுத வைக்கிறது...

தொடர்ந்து வாருங்கள்...