Thursday, 4 February 2010

கெடச்ச வரை லாபமுன்னு சுருட்டுதடா உலகம்..! - கானா பாடல்

(பல்லவி)

கெடச்ச வரை லாபமுன்னு சுருட்டுதடா உலகம்..!
நம் காலை வாரி விட்டபடி மூட்டுதடா கலகம்..!
பொது நலத்தை கொன்று தின்னும் கொடூரமான உலகம்..!
இந்த சுயநல அரக்கனுக்கு இல்லையடா மரணம்..!

(சரணம் - 1)

பதவி மேல ஆச வச்சி ஆளை காலி பண்ணுது
பொருளு மேல ஆச வச்சி பொட்டியத்தான் தூக்குது
பொண்ணு மேல ஆச வச்சி மிருகமாக மாறுது
மண்ணு மேல ஆச வச்சி மண்ணாகிப் போகுது..!  (கெடச்ச வரை... )

(சரணம் -2)

சொத்துக்காக அப்பனையே கண்டபடி உதைக்குது
பெத்தவன்னு பாக்காம விரட்டிதான அடிக்குது..!
காசுக்காக கட்டினவளை வீட்டை விட்டு விரட்டுது
மனித மனம் மிருகமாகி வேதனையை கூட்டுது..!  (கெடச்ச வரை... )


PDF-ஆகப் பெற..!


8 comments:

settaikkaran said...

அண்ணாத்தே! கலக்கல் பாட்டு! இன்னும் கொஞ்சம் சென்னை வட்டாரச்சொற்கள் சேர்க்க முயற்சி பண்ணுங்க! இப்பவே தூள்! அதுவுமிருந்தா தூளோ தூள்! கெளப்புங்க அண்ணாத்தே!!

மோகனன் said...

அன்பான சேட்டைக்காரருக்கு...

தங்களுடைய உடனடியான கருத்தும், வாழ்த்தும்...என்னை உண்மையிலேயே மகிழ்ச்சியடையச் செய்கிறது...

தங்களின் ஆசையை நிறைவேற்றுகிறேன்.. ஒரு உதவி தேவை... சென்னை பாஷையினை எனக்கு சற்று மின்னஞ்சல் ஆனுப்ப வேண்டுகிறேன்.. இது கிண்டலில்லை.. உண்மையில் கேட்கிறேன்...

ஏனெனில் நான் சென்னை வாசி அல்ல என்பதால்... தங்களிடம் இந்த வேண்டுகோள்..!

தங்களின் வருகைக்கும்... வாசிப்பிற்கும்... கருத்திற்கும் எனது
மேலான நன்றிகள்..!

அடிக்கடி வாங்க..!

SUBBU said...

தூள் :))

மோகனன் said...

அன்பான சுப்புவிற்கு...

மிக்க நன்றி... உங்களைப் போன்ற நண்பர்களுக்காகவேன்மெ நன்கு எழுதுகிறேன்...

அடிக்கடி வாங்க..!

settaikkaran said...

//ஒரு உதவி தேவை... சென்னை பாஷையினை எனக்கு சற்று மின்னஞ்சல் ஆனுப்ப வேண்டுகிறேன்.. இது கிண்டலில்லை.. உண்மையில் கேட்கிறேன்...

ஏனெனில் நான் சென்னை வாசி அல்ல என்பதால்... தங்களிடம் இந்த வேண்டுகோள்..!//
அண்ணாத்தே! நானும் சென்னைவாசியில்லே தான்! மண்ணடி மன்னாரு கிட்டே கேட்டு நம்ம ரெண்டு பேருக்கும் டியூசன் எடுப்பாரான்னு விசாரிக்கிறேன். இன்னாண்ணறே?

மோகனன் said...

ஷோக்கா சொன்ன மாமு...

அப்பால இல்ல இப்பவே கேட்டு சொல்லு...

நான் உஷாரா கீறேன்... அஜால் குஜால் பண்ணிடலாம்... இன்னா சொல்ற மாமு..

Unknown said...

உங்க கானா பாடல்கள் ரொம்ப நல்லா இருக்குது மோகனன்...

உங்களின் துபாய் பாட்டு மிக அருமை. துபையில் இருக்கும் நான் அதை மிகவும் ரசித்தேன் சார்..

குழந்தைகளை பற்றிய பாட்டு ஒன்னு எழுதனும்னு என்னோட சிறு வேண்டுகோள். சார்

மோகனன் said...

குழந்தைகளுக்கென்றே எழுதியிருக்கிறேன்...

அது http://kuttyvall.blogspot.com - ல இருக்கும் போய் பாருங்க மொஹைதீன்...