Thursday 11 February, 2010

மெரீனா பிச்சுலதான் காதலரு கூட்டமுங்க..! - கானா பாடல்


(பல்லவி)

மெரீனா பிச்சுலதான் காதலரு கூட்டமுங்க..!
கைய ரெண்டும் கோத்துகிட்டு போடுது ஒரு ஆட்டமுங்க!
சுனாமியே வந்தாலும் பயந்து போக மாட்டாங்க..!
சுண்டல்காரன் வந்தா மட்டும் சுறுசுறுன்னு விழிப்பாங்க..!

(சரணம் - 1)

காத்து மழை அடிச்சாலும்...  வெட்ட வெயில் அடிச்சாலும்...
சத்தமே போட்டாலும்... சளைக்கவே மாட்டாங்க..!
கன்னம் கன்னம் ஒட்டிகிட்டு... காலு ரெண்டும் பின்னிகிட்டு
கழுத்து மேல கைய போட்டு... காதலைத்தான் வளர்ப்பாங்க..! (மெரீனா...)

(சரணம் - 2)

புயல் மணல் அடிச்சாலும்... பூகம்பமே வந்தாலும்...
போலீஸே வந்தாலும்... பிரிஞ்சி போக மாட்டாங்க...
அப்பனையும் நினைக்காம... அம்மாவையும் நினைக்காம...
குடும்பத்தை நினைக்காம... குஜாலாதான் இருப்பாங்க..!  (மெரீனா...)

PDF-ஆகப் பெற..!


6 comments:

settaikkaran said...

ஜூப்பரு அண்ணாத்தே....!

SUBBU said...

பக்கா :))

மோகனன் said...

வாங்க சேட்டை...

முத ஆளு நீதாம்யா கானாவுல பாராட்ட...

நன்றி மாமே...

அடிக்கடி கானா வூட்டாண்ட வா...

மோகனன் said...

வணக்கம் சுப்பு

பக்காவா வாழ்த்திய உமக்கு கிக்கா ஒரு நன்றி...

அடிக்கடி வாங்க..!

Velmaheshk said...

கடி அண்ணாத்தே....!

மோகனன் said...

கோச்சுக்காதீங்க தல...

இப்பதான எயித ஆரம்பிச்சிருக்கேன்... கொஞ்சம் அப்பிடி இப்பிடின்னு கடிக்கத்தான் செய்யும்...

உங்கள மாதிரி நண்பர்களால அந்த கடி விரைவில் மகுடியா மாறும் பாருங்க...

அடிக்கடி வாங்க வேல் மகேஷ்...