Monday 8 February, 2010

துபாய் போன மச்சான் பேரு கபாலி..! - கானா பாடல்


(பல்லவி )


துபாய் போன மச்சான் பேரு கபாலி..!
துட்டு சேக்க அவன் படுற பாடு தலைவலி..!
ஒட்டகத்தை மேய்ச்சாதாண்டா தினக் கூலி..!
நம்ம ஷோக்காலி அங்க ஆனனாடா சீக்காலி..!

(சரணம்- 1)

மச்சி குல்லா போடும் வேலை உனக்கு எதுக்குடா..?
வளைகுடா நாட்டுல முதுகு வளைவு எதுக்குடா..?
நம் நாட்டுலயே நெறைய வேலை இருக்குடா..!
காசு குறையானாலும் உன்னாடுங்கறது மிடுக்குடா..!
(துபாய் போன..)


(சரணம்- 2)

அங்கே கசக்கி பிழியும் கஸ்மாலங்க நிறையடா..!
இங்கே உழைச்சா போதும் நம்ம நாடு செழிக்குண்டா..!
வெய்ய நாட்டில் வெந்து போவதெதுக்குடா..!
நம்ம மக்களோட வாழ்வதுதான் சிறப்புடா..! (துபாய் போன..)

(சரணம் 3)

அம்மா அப்பா பாசம் அங்கே இருக்குமா..?
அன்பு மனைவியோட அரவணைப்பு  கிடைக்குமா..?
உன் குழந்தைகளின் குறும்பை ரசிக்க முடியுமா..?
வேணான்டா கபாலி வெளிநாடு..!
உழைப்பதுல நீதாண்டா பெரியாளு..! (துபாய் போன..)

(அன்பான அயல் நாடு வாழ் நண்பர்களுக்கு, தங்களை குறை கூறி எழுதப்பட்டதல்ல இப்பாடல்... நம் நாட்டினில் நம்மவர்கள் உழைக்க வேண்டுமென்கிற ஒரு இந்தியனின் ஆசை..)

PDF-ஆகப் பெற..!


4 comments:

settaikkaran said...

அண்ணாத்தே! கானா படு சூப்பர்! ஒரு சின்னக் குறை! பாடிப்பார்த்தேன்...அங்கங்கே இடிக்குது. அதை ஒரு மெட்டுக்குள்ளே கொண்டுவர ட்ரை பண்ணுங்க அண்ணாத்தே!!

மோகனன் said...

அன்பான சேட்டையாருக்கு...

இப்போது சில வார்த்தைகளை மாத்தியிருக்கேன்... ஒரு ட்யுனுக்குள்ள வருதான்னு பாடிப் பாருங்க...

இல்லன்னா..எங்கெங்க இடிக்குதுன்னு சொல்லுங்க ... மாத்திடுவோம்..!

அடிக்கடி வாங்க..!

R.kannan said...

supar pa but music...?

மோகனன் said...

நீங்களே போட்டுக்கோங்க கண்ணன்