(பல்லவி)
கடலுக்குள்ள போய் வருவோம்…
கட்டுமரத்தை சேர்த்திழுப்போம்....
வாடா நண்பா வலைய வீசலாம்...
வகை வகையா மீனை பிடிக்கலாம்...!
எறா... நண்டு கிடைச்சாதானே
இன்னைக்கு நமக்கு சோறு...
இன்னைக்கு நமக்கு சோறு...
அது எப்படி கிடைக்கும் கூறு..?
சுறா கூட்டம் போகுதடா
நீயும் அங்கே பாரு...
எட்டி வீசு வலைய நல்லா
எல்லாம் மாட்டும் பாரு... – அட
அந்த எறா மாட்டும் பாரு..! (கடலுக்குள்ளே...!)
(சரணம்-2)
புயலில் சிக்கிய படகு போல
புயலில் சிக்கிய படகு போல
நம் வாழ்க்கை ஆனது பாரு...
அதை கரை சேர்ப்பது யாரு..?
நல்லா உழைச்சி முன்னுக்கு வந்தா
நம்ம வாழ்க்கை செழிக்கும் பாரு
இந்த கடலன்னை இருக்கும் வரை
நமக்கு கவலை ஏது கூறு..! (கடலுக்குள்ளே...!)
PDF-ஆகப் பெற..!
2 comments:
மீனவர்கள் பாடும் பாட்டு இயலபாக இருக்கிறாது - நல்வாழ்த்துகள் மோகனன் - நட்புடன் சீனா
நன்றி நண்பா..!
Post a Comment