மயக்கும் மாலையிலே… மார்கழி மாசத்திலே…
மங்கையவள் ஓரக்கண்ணால் சிரிக்கிறா…
மாமன் மயங்கிபுட்டா... முந்தானையால் அடிக்கிறா…
மனசை கிள்ளி கிள்ளி... என்னை அவ மயக்குறா..!
(சரணம் - 1)
காதல் ஒரு போதையடா… பார்த்தாலே ஏறுதடா…
பாக்காம பார்த்துப்புட்டா படபடப்பு கூடுதடா...
கன்னி ராணி அவதாண்டா… கட்டழகியும் அவதாண்டா…
சிட்டாகப் பறந்துபுட்டா சோகம் என்னை வாட்டுதடா… (மயக்கும்…)
( சரணம் - 2)
ராசாத்தி நினைப்புலதான் ராப்பொழுது தூங்கலடா…
என்னிரவைப் பகலாக்கி துன்பத்தை எனக்கு காட்டுறாடா...
கண்ணி வலை விரிச்சபடி என் கண்ணோடு கலந்தாடா...
கண்ணுக்குள்ள இருந்துகிட்டு காதல் போதை ஏத்தறாடா..! (மயக்கும்…)
PDF-ஆகப் பெற..!
No comments:
Post a Comment