Thursday, 20 August 2009

செல்போனு டாட்டரு… - கானா பாடல்

(பல்லவி)

செல்போனு டாட்டரு… மிஸ்டு காலு மேட்டரு..!
தம்மாத்தூண்டு செல்போனுல விடுறா பாரு பீட்டரு..!(செல்போனு…)


(சரணம் – 1)

காதுல வயர மாட்டிகிட்டு கன்னபின்னான்னு நடக்குறா…
காரு லாரி கண்டுக்காம ரோட்டு மேல மிதக்குறா…
தானாக சிரிக்கிறா… வீணாக சிணுங்குறா…
காசு தீந்துபுட்டா கமுக்கமாத்தான் இருக்கிறா..!(செல்போனு…)

(சரணம் – 2)

பிஎஸ்என்எல் போலத்தான் சிணுங்கி என்னை அழைக்கிறா...
ரிலையன்ஸ் போலத்தான் ரொம்ப ரிச்சாக மினுக்குறா...
ஏர்டெல்லாக இருக்கிறா… ஏர்செல்லாக முறைக்கிறா…
சிக்னல் காட்டிபுட்டா சிடுமூஞ்சிய காட்டுறா..!


செல்போனு டாட்டரு… மிஸ்டு காலு மேட்டரு..!
தம்மாத்தூண்டு செல்போனுல விடுறா பாரு பீட்டரு..!(செல்போனு…)

PDF-ஆகப் பெற..!


Wednesday, 19 August 2009

கானா அறிமுகம்

சென்னை பூர்வீகக் குடிகளின் இரத்தத்தில் கலந்த பாடல் வகை கானா. நடைமுறை வார்த்தைகளைக் கொண்டு, இலக்கணங்கள் ஏதுமின்றி பாடுவது கானா ஆகும். இதில் அவர்களது உணர்வுகள், ஏக்கங்கள், வலிகள் என அனைத்தும் கலந்திருக்கும்... பிறந்தாலும் கானா பாடுவார்கள், இறந்தாலும் கானா பாடுவார்கள்..!

நான் சென்னை பூர்வீகக் குடிமகன் இல்லை என்றாலும், தமிழின் மகன் என்ற வகையில் நானும் கானா எழுதியுள்ளேன்.

காதல், சமூகக் கவிதைகள் என எழுதி வந்த என்னை கானா பாடல்கள் எழுதுங்கள் என ஊக்கமும், ஆக்கமும், அதற்கு சன்மானமும் தந்த திரு. பழனி அவர்களுக்கு எனது நன்றிகளை இங்கே பணிவுடன் சமர்ப்பிக்கிறேன். இதற்க்கான எழுத்து மற்றும் பதிப்பிக்கும் உரிமையை மீண்டும் வழங்கிய திரு. பழனி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளும் பலப்பல...

எனது வரிகளுக்கு  இசை வழியே உயிர் கொடுத்த நண்பர் மோகன்  ராம் அவர்களுக்கு எனது நட்பு கலந்த நன்றிகள்...

இந்த கானா பாடல்கள் வணிக நோக்கிற்காக எழுதப்பட்டாலும், என் படைப்புகள் என்பதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன்..! அதை உங்களிடம் படையலிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்...

PDF-ஆகப் பெற..!