Friday 31 December, 2010

நட்ட நாடு சாமத்துல பிறக்குதுடா புத்தாண்டு..! - புத்தாண்டு சிறப்பு கானா பாடல்


(பல்லவி)

நட்ட நாடு சாமத்துல பிறக்குதுடா புத்தாண்டு..! 
உலகத்தோட சேர்ந்து நீயும் உற்சாகமா கொண்டாடு..!
சாதி, மத, பேதமின்றி எல்லோருடன் கொண்டாடு 
இனி நல்லதே நடக்கும்னு கானா பாடு..! நீயும் தானா பாடு..! 

(சரணம் - 1)

உலக மக்கள் எல்லோருக்கும் இந்நாள் ஒரு திருநாள்...
மொழி மறந்து, நிறம் மறந்து வாழ்த்தும் ஒரு வளநாள்...
துன்பத்தினை மறந்து விட , இன்பத்தினை சேர்த்து விட
இனிப்புகளை கொடுத்து விட பிறக்குது ஒரு புது நாள்... 
எல்லோரும் கொண்டாடும் குதுகலமான நாள்..! 

(சரணம் - 2)

புத்தாண்டை நீயும் கொண்டாடு..!
புது மனுசனாக நீயும் மாறு..!
கஷ்டத்தெல்லாம் தூக்கி போடு..!
விஷ் யு ஹேப்பி நியூ இயருன்னு பாடு..! 
வந்துடிச்சி டூ தௌசன் லெவனு..!
இனி வாழ்கையில நாம வின்னு..!


(இனிய இணைய வாசகர்களுக்கும், கானா ரசிகர்களுக்கும் எனது மனதிற்கினிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2010)


PDF-ஆகப் பெற..!


Wednesday 22 December, 2010

கடலுக்குள்ள போய் வருவோம்..! - கானா பாடல்


(பல்லவி)

கடலுக்குள்ள போய் வருவோம்
கட்டுமரத்தை சேர்த்திழுப்போம்....
வாடா நண்பா வலைய வீசலாம்...
வகை வகையா மீனை பிடிக்கலாம்...!

(சரணம்-1)
எறா... நண்டு கிடைச்சாதானே
இன்னைக்கு நமக்கு சோறு...
அது எப்படி கிடைக்கும் கூறு..?

சுறா கூட்டம் போகுதடா
நீயும் அங்கே பாரு...
எட்டி வீசு வலைய நல்லா
எல்லாம் மாட்டும் பாரு... அட
அந்த எறா மாட்டும் பாரு..!  (கடலுக்குள்ளே...!)

(சரணம்-2)
புயலில் சிக்கிய படகு போல
நம் வாழ்க்கை ஆனது பாரு...
அதை கரை சேர்ப்பது யாரு..?

நல்லா உழைச்சி முன்னுக்கு வந்தா
நம்ம வாழ்க்கை செழிக்கும் பாரு
இந்த கடலன்னை இருக்கும் வரை
நமக்கு கவலை ஏது கூறு..!  (கடலுக்குள்ளே...!)

(இரண்டு மீனவ நண்பர்கள் பாடுவது போல் எழுதியிருக்கிறேன்... பிடித்திருந்தால் பாடி மகிழவும்..!)



PDF-ஆகப் பெற..!