Thursday 24 September, 2009

ஆயிரந்தான் இருந்தாலும் அம்மா போல யார் வருவா..! - கானா பாடல்

(பல்லவி)

ஆயிரந்தான் இருந்தாலும் அம்மா போல யார் வருவா..!
அவளைப் போல அன்பைத் தர உலகத்துல யார் இருக்கா..!
உருக்கொடுத்து, உயிர் கொடுத்த உத்தமியை மறக்காதப்பா..!
இந்த கலிகால உலகத்திலே  மனித தெய்வம் அவதாம்பா..!

(சரணம் - 1)

பத்துமாசம் சுமந்தவப்பா... பத்தியம்தான் இருந்தவப்பா..!
பத்தரை மாத்து தங்கமப்பா..! பாசத்திற்கு பணிந்தவப்பா..!
தூக்கத்தையே மறந்தவப்பா... தூய உள்ளம் படைச்சவப்பா..!
துக்கப்பட்டு நீயிருந்தா... உடனே துடிப்பவளும் அவதாம்பா..!

(
ஆயிரந்தான்...)

(சரணம் - 2)

தியாக மனம் கொண்டவப்பா... திடமனசை நமக்களிப்பா..!
ஓயாம உழைப்பவப்பா... நம்மை உற்சாகமா வைச்சிருப்பா..!
கஷ்டங்களை அனுபவிப்பா... கட்டாந்தரையில் படுத்திருப்பா..!
இஷ்டப்பட்டு நீ கேட்டா தன் இதயத்தையே அறுத்து வைப்பா..!

(
ஆயிரந்தான்...)

(என் அன்னைக்கும், உலகத்தில் உள்ள அனைத்து அன்னைகளுக்கும் உங்களனைவரின் சார்பாக இந்த கானாப் பாடலை, அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்..!)


PDF-ஆகப் பெற..!


Wednesday 23 September, 2009

விலைவாசி விஷம் போல ஏறுது..! - கானா பாடல்

(பல்லவி)

விலைவாசி விஷம் போல ஏறுது..!
ஏழை சனம் பட்டினியால் வாடுது..!
அரிசி விலை, பருப்பு விலை அதிகரிச்சி நிக்குது..!
அதிகவிலை தராததால காய்கறியும் சிரிக்குது..!


(சரணம் - 1)

பதுக்கலு கூட்டம் இங்க பலவேலை பாக்குது..!
விலையும் அதனால விமானம் போல ஏறுது..!
பாலு விலையேறி பாலகன் வயித்தை சுருக்குது..!
பாவப்பட்ட ஏழை சனம் பரிதவிச்சி நிக்குது..! (விலைவாசி...)


(சரணம் - 2)

உழைக்கும் வர்க்கம் இங்கே உடம்பு தேய உழைக்குது...
அதன் வியர்வை இங்கே ரத்தமாகி ஆறு போல ஓடுது..!
பணக்கார கூட்டமிங்கே பணத்தை காட்டி ஏய்க்குது..!
பாவப்பட்ட ஏழைசனங்க வறுமையால வாடுது..!(சில்லறை...)

PDF-ஆகப் பெற..!


Tuesday 22 September, 2009

சில்லறை போலத்தானே சிரிக்குற..! - கானா பாடல்

(பல்லவி)

சில்லறை போலத்தானே சிரிக்குற..!
சிக்கனமா துணியை போட்டு மயக்குற..!
கண்ணால காதல் போதை ஏத்துற..!
கபால்னு எம்மனசை மாத்துற..!


(சரணம் - 1)

ஆர்ப்பாட்டம் இல்லாம... அங்க இங்க துள்ளாம...
அம்சமா நடந்து வந்து காட்டுற..!
நம்ம ஐஸ்வர்யா ராயாட்டம் அசத்துற..!
இந்த மாமனை அசால்டாக அசத்துற..! (சில்லறை...)


(சரணம் - 2)

தூண்டிலும் இல்லாம... வலை கிலை இல்லாம...
வெறும் கண்ணால காதல் வலை வீசுற..!
கண்ணழகி மீனா போல அசத்துற..!
அப்படியே மாமனை மயக்கி இழுக்குற..! (சில்லறை...)



PDF-ஆகப் பெற..!


Wednesday 16 September, 2009

பாழாப் போன மனுசனுக்கு… - கானா பாடல்

(பல்லவி)

பாழாப் போன மனுசனுக்கு… பணம் பெரும் போதையடா..!
வாழ வந்த மனுசனுக்கு… குணம் இங்கு இல்லையடா..!
காலம் போற வேகத்துல புகழ் போதை ஏறுதடா..!
வசதி வாய்ப்பு இருந்ததான் ஊரு உன்னை மதிக்குமடா..!


(சரணம் - 1)

நல்ல குணம் இருந்தாலும் பாழும் உலகம் மதிக்காது..!
நாலு பணம் உனக்கிருந்தா ஏழு உலகும் மதிக்குமடா..!
பணம் ஒரு வேசியடா… மயங்கி நீயும் போகாதடா..!
குணம் காத்து நீ வந்தா..! உன்னைத் தேடி பணம் வருண்டா..! (பாழாப் போன...)


(சரணம் - 2)

காசு பணம் வச்சிருந்தா கண்ட சொந்தம் வந்துடுண்டா..!
கஷ்டமுன்னு நீ நின்னா பஞ்சா பறந்து போயிடுண்டா..!
எல்லாம் இங்கு வேஷமடா… பொய்யி முகம் காட்டுதடா..!
பொல்லாத உலகத்துல… எல்லாம் இங்கு பணம்தாண்டா..! (பாழாப் போன...)

PDF-ஆகப் பெற..!


Tuesday 15 September, 2009

மணிமேகலாவே கிட்ட நீ வாம்மா..! - கானா பாடல்

(பல்லவி)

மணிமேகலாவே கிட்ட நீ வாம்மா..!
கொஞ்சம் கனிவாக நீயும் பேசம்மா..!
காதலிப்பது ரொம்ப பாவமா..!
கத்துறியே ரொம்ப கோவமா..!
ஆசை காட்டி நைஸா போறியேயம்மா..!
உன்னால ஐஸாக உருகிறேனம்மா..!

(சரணம் - 1)

இந்த ராஜாவோடா ரோஜா நீதானம்மா..!
உன்னை தாஜா பண்ண கூஜா தூக்கணுமா..!
ரொம்ப பேஜாராச்சு உன்னோடதாம்மா..!
உன் சங்காத்தமே வேணான்டியம்மா..!     (மணிமேகலாவே...)


( சரணம் - 2)

உன் தங்கச்சிதான் சூப்பர் பிகரும்மா..!
எனக்கு நீ ஒரு சப்பை பிகரும்மா..!
ஜாக்கெட் போட்ட  குயிலு அவளம்மா..!
பிராக்கெட் போட போறேன் நானம்மா..!    (மணிமேகலாவே...)

PDF-ஆகப் பெற..!


Monday 14 September, 2009

அரைகுறை ஆடையத்தான்... - கானா பாடல்

பல்லவி

அரைகுறை ஆடையத்தான் பெண்ணே நீ போடாதே..!
வயசுப்பசங்களைத்தான் வழுக்கி விழ வைக்காதே..!
உடம்பை மறைக்கும்படி ஆடையத்தான் நீ போட்டா..!
காலிப் பையன் கூட பண்ணமாட்டான் கலாட்டா..!

சரணம் - 1

தாவணி, சுடிதாருன்னு நல்ல டிரெஸ்ஸை நீ போடு..!
தமிழ்நாட்டு பொண்ணு இன்னு ஊருக்கு நீ காட்டு..!
அங்கங்கள் தெரிகின்ற  ஆடைகள் வேணாமே..!
தங்கமே உன்னழகை ஊரு பார்க்க வேணாமே..!     (அரைகுறை...)

சரணம் - 2

உன் மனசை திறந்து வைய்யி... உடம்பை மறைச்சி வைய்யி..!
பாதையில கவனம் வைய்யி... பழக்கத்தை மாத்தி வைய்யி..!
கண்ணிலென்ன மைய்யி... மைய்யி...
இந்த வாலிபம் பொய்யி... பொய்யி...        (அரைகுறை...)

PDF-ஆகப் பெற..!


Thursday 10 September, 2009

ஆழ்வார் பேட்டையில ஒரு அடக்கம் நடக்குது...- கானா பாடல்

(பல்லவி)

ஆழ்வார் பேட்டையில ஒரு அடக்கம் நடக்குது!
ஆறடி மண்ணுக்குத்தான் அங்க சண்டையே நடக்குது..!
உயிரோடு இருக்கையில உதாசீனப் படுத்துது..!
உசிரை விட்டுப்புட்டா உச்சு... உச்சு கொட்டுது..!
(ஆழ்வார்…)

(சரணம் – 1)

உசிரோடு இருக்கும் வரை நல்லதை நீ செய்யிடா…
நல்லவன் மேல் எப்போதுமே பாசத்தை நீ வையடா…
சாதி சனம் எல்லாமுமே பொய்யி பொய்யி தானடா…
நான் சொல்லுறதை நம்பு.. எல்லாம் மெய்யிதானடா..! (ஆழ்வார்…)

(சரணம் – 2)

நல்லதை செஞ்சி வச்சா நாலு ஊரு பாராட்டும்..!
கெட்டதை செஞ்சி வச்சா கேடின்னு ஊர் தூற்றும்..!
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடறது வேணான்டா..!
நாடாண்ட ராசா கூட கடைசியில் பிடி சாம்பல்டா..! (ஆழ்வார்)


PDF-ஆகப் பெற..!